/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆசிரமவாசி உள்ளிட்ட 11 பேரிடம் ரூ. 6.20 லட்சம் மோசடி ஆசிரமவாசி உள்ளிட்ட 11 பேரிடம் ரூ. 6.20 லட்சம் மோசடி
ஆசிரமவாசி உள்ளிட்ட 11 பேரிடம் ரூ. 6.20 லட்சம் மோசடி
ஆசிரமவாசி உள்ளிட்ட 11 பேரிடம் ரூ. 6.20 லட்சம் மோசடி
ஆசிரமவாசி உள்ளிட்ட 11 பேரிடம் ரூ. 6.20 லட்சம் மோசடி
ADDED : ஜூன் 20, 2024 03:39 AM
புதுச்சேரி : அரவிந்தர் ஆசிரமவாசி உள்ளிட்ட 11பேரிடம் ரூ. 6.20 லட்சம் மோசடி செய்த சைபர் கிரைம் கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தை சேர்ந்தவர் அரவிந்த் விக்கி. இவரை தொடர்பு கொண்ட பெண், தங்களுக்கு வெளிநாட்டில் இருந்து விலை உயர்ந்த பரிசுப்பொருட்கள் பார்சலில் டில்லி இந்திரா காந்தி விமான நிலையம் வந்துள்ளதாகவும், இந்த பரிசுப்பொருள் பார்சல் பெற்று கொள்ள ஜி.எஸ்.டி. தொகையாக ரூ.1.84 லட்சம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனை உண்மை என நம்பிய அரவிந்த் விக்கி, அப்பெண் கூறிய வங்கி கணக்கில் ரூ. 1.84 லட்சம் பணம் செலுத்தினார். அதன் பிறகு பொருட்கள் ஏதும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அரவிந்த் விக்கி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
ரெட்டியார்பாளையம் மோனிஷாதேவிவை தொடர்பு கொண்ட மர்ம நபர், வீட்டில் இருந்து பகுதி நேர வேலை செய்யலாம் என கூறி ரூ. 44 ஆயிரம், காரைக்கால் திருப்பட்டினத்தைச் சேர்ந்த பாலாஜி என்பவரிடம் ரூ. 2 லட்சமும், பூரணாங்குப்பத்தைச் சேர்ந்த முருகையன் என்பவரிடம் வங்கி கணக்கில் இருந்து ரூ. 93 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுள்ளது.
லாஸ்பேட்டை சேர்ந்த அபிராமி என்பவரிடம், பிரதமர் பெயரில் பரிசு விழுந்ததாக கூறி ரூ. 4,997, காரைக்காலைச் சேர்ந்த தனசேகர் என்பவரிடம் லாட்டரியில் பரிசு விழுந்ததாக கூறி ரூ. 23 ஆயிரம், நைனார்மண்டபம் கார்த்திக் என்பவரிடம் குறைந்த வட்டிக்கு கடன் தருவதாக கூறி ரூ. 48 ஆயிரம் பணம் திருடப்பட்டது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.