/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ லோக் அதாலத்தில் 1,060 வழக்குகள் ரூ. 7.43 கோடிக்கு தீர்வு லோக் அதாலத்தில் 1,060 வழக்குகள் ரூ. 7.43 கோடிக்கு தீர்வு
லோக் அதாலத்தில் 1,060 வழக்குகள் ரூ. 7.43 கோடிக்கு தீர்வு
லோக் அதாலத்தில் 1,060 வழக்குகள் ரூ. 7.43 கோடிக்கு தீர்வு
லோக் அதாலத்தில் 1,060 வழக்குகள் ரூ. 7.43 கோடிக்கு தீர்வு
ADDED : ஜூன் 09, 2024 03:57 AM
புதுச்சேரி : புதுச்சேரி தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 1,060 வழக்குகள் முடிக்கப்பட்டு, 7 கோடி, 43 லட்சத்து, 65 ஆயிரத்து, 608 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் நீதிமன்ற வளாகங்களில், தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. இதில், நிலுவையில் உள்ள வழக்குகளும், எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டது.
புதுச்சேரி ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், 9 அமர்வுகளும், சட்டப்பணிகள் ஆணைய வளாகத்தில், 1 அமர்வை தலைமை நீதிபதி சந்திரசேகரன் மற்றும் உறுப்பினர் செயலர் அம்பிகா ஆகியோர் பார்வையிட்டனர். மேலும், காரைக்காலில், 4 அமர்வுகளும், மாகியில், 1 அமர்வும், ஏனாமில், 1 அமர்வும் ஆக, 16 அமர்வுகள் செயல்பட்டது.
இதில் கோர்ட்டில் நிலுவையில் உள்ள மற்றும் நேரடியான வழக்குகள், 6,541 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதில், 1,060 வழக்குகள் முடிக்கப்பட்டு, 7 கோடியே 43 லட்சத்து 65 ஆயிரத்து 608 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது. இதில், நீதிமன்ற நிலுவையில் இருந்த, 927 வழக்குகள் முடிக்கப்பட்டன.