Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஊரணி பொங்கல் 

ஊரணி பொங்கல் 

ஊரணி பொங்கல் 

ஊரணி பொங்கல் 

ADDED : ஜூலை 30, 2024 04:56 AM


Google News
திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் செங்கேணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆடி மாத சாகை வார்த்தல் உற்சவம் நேற்று துவங்கியது.

இதையொட்டி, மாலை 4:00 மணிக்கு ஐய்யனாரப்பன் கோவிலில் ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும், இரவு 8:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.

முக்கிய நிகழ்வாக இன்று (30ம் தேதி) காலை 10:00 மணி அளவில் செங்கேணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us