கேரளாவைப்போல கூட்டுறவுத்துறையில் தமிழகம் முன்னேறுமா?
கேரளாவைப்போல கூட்டுறவுத்துறையில் தமிழகம் முன்னேறுமா?
கேரளாவைப்போல கூட்டுறவுத்துறையில் தமிழகம் முன்னேறுமா?

முன்மாதிரியான கேரளா
கேரளாவில் 14 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளும் ஒரு மாநில வங்கியும் உள்ளன. அதனுடைய கடன் சங்கங்கள் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளன. மக்கள் கூட்டுறவு வங்கிகளை அதிகமாக பயன்படுத்துவதால் டிபாசிட் தொகையும் நன்றாக கிடைக்கிறது. எனவே அனைத்து மத்திய வங்கிகளையும் ஒருங்கிணைத்து கேரள கூட்டுறவு வங்கி என உருவாக்கப்பட்டது. தற்போது ஆசியாவிலேயே மிகப்பெரிய கூட்டுறவு வங்கியாக கேரளா மாறி விட்டது. இதன் மூலம் மக்கள் குறைந்த வட்டிக்கு பயன்பெறுகின்றனர்.
நிதியை கூட்டுறவுக்கு மாற்ற வேண்டும்
தமிழக அரசு உள்ளாட்சிகளுக்கு வழங்கும் நிதி அனைத்தும் தேசிய வங்கிகள் மூலம் தான் செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் கிராம அளவில் 4500 கூட்டுறவு கடன் சங்கங்கள் இருந்தும் தமிழக அரசின் நிதி இங்கு டிபாசிட்டாக பெறப்படுவதில்லை. தனித்தனி மாவட்டமாக இருப்பதோடு கடன் சங்கங்களுக்கு இடையே இன்டர்நெட் பேங்கிங்' வசதியும் இல்லை. தேசிய, தனியார் வங்கிகளைப்போல அனைத்து கிளைகளும் சர்வர்' இணைப்பில் கொண்டுவர வேண்டும்.