ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர்கள்: அ.தி.மு.க.,வில் இழுபறி ஏன்?
ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர்கள்: அ.தி.மு.க.,வில் இழுபறி ஏன்?
ராஜ்யசபா தேர்தல் வேட்பாளர்கள்: அ.தி.மு.க.,வில் இழுபறி ஏன்?

அழுத்தம்
தி.மு.க., சார்பில் வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோரும், ம.நீ.ம., சார்பில் கமலும் போட்டியிட உள்ளனர். மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு, அ.தி.மு.க., சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட வேண்டும். அந்த இருவர் யார் என்பதில்தான், அ.தி.மு.க.,வில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
ராஜ்யசபாவில், முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த தர்மர் என்பவர் தற்போது அ.தி.மு.க., - எம்.பி.,யாக உள்ளார். அதே சமுதாயத்தைச் சேர்ந்த ஐ.டி., அணி நிர்வாகி ராஜ்சத்யன் தற்போது எம்.பி., பதவி கேட்டு, பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார்.
எதிர்ப்புக்கொடி
இருந்தபோதும், எப்படி யாவது ராஜ்யசபா எம்.பி.,யாகி விட வேண்டும் என நினைக்கும் ராஜ் சத்யன், இதற்காக உத்தேச பட்டியலில் இருக்கும் பலர் குறித்தும் சமூக வலைதளங்களில் செய்திகள் வரவழைப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், ராஜ் சத்யனுக்கும் அவர்களுக்கும் இடையே பூசல் ஏற்பட்டுள்ளது.