1,000 கோடி அமுக்கிய தியாகி யார்?: அ.தி.மு.க., போஸ்டரால் பரபரப்பு
1,000 கோடி அமுக்கிய தியாகி யார்?: அ.தி.மு.க., போஸ்டரால் பரபரப்பு
1,000 கோடி அமுக்கிய தியாகி யார்?: அ.தி.மு.க., போஸ்டரால் பரபரப்பு
ADDED : மார் 28, 2025 12:52 AM

திருப்பூர்: திருப்பூர் நகரம் முழுதும் 1,000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து, '1,000 கோடி அமுக்கிய, அந்த தியாகி யார்?' என்று கேட்டு, அ.தி.மு.க.,வினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
'டாஸ்மாக்' ஊழல் குறித்து பா.ஜ.,வினர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.
அ.தி.மு.க., உள்ளிட்ட மற்ற கட்சியினரும், இவ்விவகாரம் குறித்து தி.மு.க., அரசுக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், மாநகரம் முழுதும் பிரதான சாலைகளில் உள்ள சுவர்களில் 'டாஸ்மாக்' ஊழல் தொடர்பாக போஸ்டர்களை ஒட்டிஉள்ளனர். இவை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போஸ்டரில், '1,000 ரூபாய் கொடுப்பது போல கொடுத்து, 1,000 கோடி அமுக்கிய அந்த தியாகி யார்?' என்று கேட்கும் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.