Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/புதுச்சேரியில் விஜய் 'ரோடு ஷோ': அனுமதி வழங்குவதில் சிக்கல்

புதுச்சேரியில் விஜய் 'ரோடு ஷோ': அனுமதி வழங்குவதில் சிக்கல்

புதுச்சேரியில் விஜய் 'ரோடு ஷோ': அனுமதி வழங்குவதில் சிக்கல்

புதுச்சேரியில் விஜய் 'ரோடு ஷோ': அனுமதி வழங்குவதில் சிக்கல்

Latest Tamil News
புதுச்சேரி: புதுச்சேரியில், த.வெ.க., தலைவர் விஜய் 'ரோடு ஷோ'விற்கு போலீஸ் அனுமதி கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், வரும் 5ம் தேதி புதுச்சேரியில், 'ரோடு ஷோ' வாயிலாக மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார். அங்கு, காலாப்பட்டு முதல் கன்னியகோவில் வரை 'ரோடு ஷோ' செல்லவும், சோனாம்பாளையத்தில், வாகனத்தில் இருந்தபடி பேசவும் அனுமதி கேட்டு, முதல்வர் ரங்கசாமியிடமும், டி.ஜி.பி., அலுவலகத்திலும் த.வெ.க., நிர்வாகிகள் கடந்த 26ம் தேதி மனு கொடுத்தனர்.

போலீசார் எந்த பதிலும் அளிக்காததால் டி.ஜி.பி.,யை சந்திக்க, கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் கடந்த 29ம் தேதி சென்றார். ஆனால், டி.ஜி.பி., இல்லாததால் சந்திக்கவில்லை. இந்நிலையில், நேற்று மீண்டும் டி.ஜி.பி., அலுவலகத்துக்கு ஆனந்த் வந்தார்.

நேற்றும் டி.ஜி.பி., இல்லாததால் ஐ.ஜி., அஜித்குமார் சிங்லாவை சந்தித்து, 'ரோடு ஷோ'விற்கு அனுமதி தருமாறு கோரினார். அவர், 'டி.ஜி.பி., மற்றும் டி.ஐ.ஜி., ஊரில் இல்லை; அவர்கள் வந்தபின் மீண்டும் வாருங்கள்' என ஆனந்திடம் கூறிவிட்டார்.

இதையடுத்து, அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆனந்த், 'விஜயின் 'ரோடு ஷோ' நிகழ்ச்சிக்கு நிச்சயம் அனுமதி கிடைக்கும்' என தெரிவித்தார்.

இது குறித்து, புதுச்சேரி போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், 'கரூர் உயிரிழப்பு சம்பவத்தை தொடர்ந்து, 'ரோடு ஷோ'வுக்கான வழிகாட்டு நெறிமுறை தொடர்பான வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த புதுச்சேரியில் 'ரோடு ஷோ' நடத்துவது சிரமம்.

'எனவே, திடல் போன்ற இடத்தில், மக்கள் மத்தியில் விஜய் பேச அனுமதி தருவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, இன்று, த.வெ.க., நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும்' என்றனர். இதனால், புதுச்சேரியில் விஜய் 'ரோடு ஷோ'விற்கு அனுமதி வழங்குவதில் சிக்கல் நீடிக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us