உதயநிதி ஆதரவாளர்கள் கட்சி பதவிகளில் திணிப்பு; மாவட்டங்களில் கோஷ்டி பூசல் அதிகரிப்பு
உதயநிதி ஆதரவாளர்கள் கட்சி பதவிகளில் திணிப்பு; மாவட்டங்களில் கோஷ்டி பூசல் அதிகரிப்பு
உதயநிதி ஆதரவாளர்கள் கட்சி பதவிகளில் திணிப்பு; மாவட்டங்களில் கோஷ்டி பூசல் அதிகரிப்பு

புலம்பல்
துணை முதல்வர் உதயநிதியின் ஆதரவாளர்களை, கட்சி நிர்வாகத்தில் வலிந்து திணிக்க முயற்சிப்பதால், மாவட்ட வாரியாக அதிருப்தி கோஷ்டிகள் அதிகரித்து வருகின்றன. கட்சி, ஆட்சி என்ற இரட்டை குதிரையில் சவாரி செய்யும் உதயநிதி, ஒரு சிலரின் பேச்சை கேட்டு எடுக்கும் முடிவு, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக கட்சியினர் புலம்புகின்றனர்.
கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில், வன்னியர் சமூகத்தை சேர்ந்த லட்சுமணனுக்கு மாவட்டச்செயலர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரை, விழுப்புரம் அறிவாலயம் அலுவலகத்தில் உள்ள, மாவட்டச்செயலர் அறைக்கு, அமைச்சர் பொன்முடி அனுமதிப்பதில்லை. அந்த அலுவலகத்தில், தான் மட்டும் இருந்து கோலோச்ச வேண்டும் என, அவர் விரும்புகிறார்.
தொய்வு
இதனால், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், லட்சுமணனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க அச்சப்படுகின்றனர். இது, விழுப்புரம் மாவட்ட தி.மு.க.,வில் பெரும் குழப்பத்தை உருவாக்கி உள்ளது. இதற்கு தீர்வு காண, உதயநிதியை சந்தித்து பேச, மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் சென்றால், அவர்களை இரண்டு, மூன்று மணி நேரம் காத்திருக்க வைத்து, இறுதியில் சில நிமிடங்கள், புகைப்படம் எடுத்துக் கொண்டு அனுப்பி விடுகிறார்.
எச்சரிக்கை
தர்மபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க., செயலர் தடங்கம் சுப்பிரமணி மாற்றப்பட்டு, தர்மச்செல்வன் புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் கலெக்டர், எஸ்.பி.,யை மிரட்டும் வகையில் பேசியதால், அவர் மாற்றப்பட்டார். புதிய மாவட்ட பொறுப்பாளராக மணி எம்.பி., நியமிக்கப்பட்டார். இதனால் அங்கும் தேவையில்லாமல் 3 கோஷ்டிகள் உருவாகி உள்ளன.