Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தது தி.மு.க., அரசின் உண்மை முகம்; நயினார் நாகேந்திரன் கண்டனம்

மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தது தி.மு.க., அரசின் உண்மை முகம்; நயினார் நாகேந்திரன் கண்டனம்

மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தது தி.மு.க., அரசின் உண்மை முகம்; நயினார் நாகேந்திரன் கண்டனம்

மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தது தி.மு.க., அரசின் உண்மை முகம்; நயினார் நாகேந்திரன் கண்டனம்

ADDED : மே 24, 2025 03:37 AM


Google News
Latest Tamil News
சென்னை : 'கள்ளச்சாராயத்தை தட்டிக்கேட்டு, நியாயத்தை பேச வந்த மக்களை அவமானப்படுத்தியதுடன், அவர்களின் உயிரே போகும் அளவிற்கு மனிதாபிமானம் இன்றி செயல்படும் தி.மு.க., அரசின் உண்மை முகம், மேலும் ஒருமுறை வெளிவந்துள்ளது' என, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:


கள்ளச்சாராயத்தை காப்பாற்ற எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் காவு வாங்க, தி.மு.க., அரசு தயாராக இருக்கும் என்பதற்கான மற்றொரு ஆதாரம் தான், தஞ்சையில் நிகழ்ந்த பயங்கர சம்பவம்.

கடந்த ஏப்ரலில் நடுக்காவேரியில் கள்ளச்சாராயம் விற்பவர்களை தட்டிக்கேட்ட இளைஞர் தினேஷ் மீது, போலி வழக்கு பதிந்து கைது செய்தது காவல் துறை.

அவரை விடுவிக்கக் கோரி, அவரது இரு சகோதரியரும் காவல் நிலையம் முன் விஷம் குடித்து, தற்கொலை செய்ய முயற்சித்தபோது, தரக்குறைவாக பேசியதோடு தாமதமாக சிகிச்சைக்கு அழைத்து சென்றதால், தினேஷின் இளைய சகோதரி கீர்த்திகா உயிர் பறிபோனது.

மறைந்த கீர்த்திகாவின் இறப்புக்கான நியாயத்தை பெற்று தரும் பொருட்டு, தேசிய எஸ்.சி., - எஸ்.டி., ஆணையம் தானாக விசாரிக்க முன்வந்த நிலையில், அப்போது கூட பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்கவில்லை அரசு.

ஆணையத்தின் அலுவலகத்தில் இம்மாதம் 22ம் தேதி நேரில் ஆஜராகுமாறு, கலெக்டர் வழியாக 17ம் தேதி அனுப்பப்பட்ட கடிதம் தாமதமாக, 20ம் தேதி இரவில் தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்டது.

ஆணையத்தின் முன் அவர்கள் ஆஜராகி விட்டால், இவ்வழக்கின் உண்மைகள் வெளிவந்து விடும் என்ற அச்சத்தில், அவர்கள் டில்லிக்கு செல்வதை தடுக்க, காவல் துறை சதி செய்ய முயன்றதாக சந்தேகம் எழுகிறது.

பொருளாதார ரீதியாக பின்தங்கிய அக்குடும்பத்தினர், ஒரே நாளில் எப்படி டில்லிக்கு செல்வது என்று தெரியாமல் தவித்தபோது, பா.ஜ., மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி, தன் செலவில் விமானத்தில் அனுப்பி வைத்து, ஆணையம் முன் ஆஜராக வழி செய்துள்ளார்.

கள்ளச்சாராயத்தை தட்டிக் கேட்டு, நியாயத்தை பேச வந்த மக்களை அவமானப்படுத்தியதோடு, அவர்களின் உயிரே போகும் அளவிற்கு மனிதாபிமானம் இன்றி செயல்படும் தி.மு.க., அரசின் உண்மை முகம், மேலும் ஒருமுறை வெளிவந்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us