Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/போரை நிறுத்துங்க! 'ஹாட்லைன்' கலந்துரையாடலில் கதறிய பாக்., டி.ஜி.எம்.ஓ.,

போரை நிறுத்துங்க! 'ஹாட்லைன்' கலந்துரையாடலில் கதறிய பாக்., டி.ஜி.எம்.ஓ.,

போரை நிறுத்துங்க! 'ஹாட்லைன்' கலந்துரையாடலில் கதறிய பாக்., டி.ஜி.எம்.ஓ.,

போரை நிறுத்துங்க! 'ஹாட்லைன்' கலந்துரையாடலில் கதறிய பாக்., டி.ஜி.எம்.ஓ.,

ADDED : மே 11, 2025 03:19 AM


Google News
Latest Tamil News
லெப்டினன்ட் ஜெனரல் ராஜிவ் கய் என்ற பெயர், தற்போது பெரிதும் பேசப்படுகிறது. இவர் நமது ராணுவ நடவடிக்கைகளின் இயக்குனர் ஜெனரல்; அதாவது தலைமை இயக்குனர்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே, போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு இவரது செயல்பாடுகள் முக்கிய காரணம்.

இரு நாட்டு ராணுவ நடவடிக்கைகளுக்கான, தலைமை இயக்குனர்கள் (டி.ஜி.எம்.ஓ.,) இடையே, ஹாட்லைன் கலந்துரையாடலுக்குப் பின், சண்டை நிறுத்தம் சாத்தியமானது. ராணுவத்தை பொறுத்தவரை, டி.ஜி.எம்.ஒ., என்பது ஒரு முக்கியமான, பொறுப்பான பதவி. அனைத்து ராணுவ நடவடிக்கைகளுக்கும் அவரே பொறுப்பு.

நாட்டின் எந்த ஒரு ராணுவ நடவடிக்கை, அதை வழிநடத்த அறிவுறுத்தல் வழங்குவது என்பன உட்பட அனைத்து பணிகளையும், அவரே மேற்கொள்வார். போர் அல்லது மோதல்களின்போது, அனைத்து முடிவுகளும் அவரால் எடுக்கப்படுகின்றன. போர் அல்லது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் நடக்கும்போது அமைதி காக்கும் பணிகளுக்கான யுக்திகளையும் அவரே தயாரிப்பார்.

சமீபத்தில் கட்டுப்பாடு எல்லைக்கோட்டு பகுதியில், பாகிஸ்தான் அத்துமீறி பீரங்கி குண்டு தாக்குதல், துப்பாக்கி சண்டை நடத்தியபோது, பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கை தலைமை இயக்குனரை ஹாட்லைனில், இந்தியாவின் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

அதேபோல், நேற்று அதிகாலையில், பாகிஸ்தானின் விமான படைதளங்களை இந்தியா துவம்சம் செய்தபோது, பாக்., டி.ஜி.எம்.ஓ., - இந்திய டி.ஜி.எம்.ஓ.,வை ஹாட்லைனில் அழைத்து, 'அய்யா கொஞ்சம் கவனியுங்க... எங்க நிலைமை கந்தலாய் போச்சு' என கதறினார்.

ராணுவத்தின் மூன்று பிரிவுகள் தரைப்படை, விமானப்படை, கடற்படைகளின் இடையே ஒரு பாலமாகவும் டி.ஜி.எம்.ஓ., செயல்படுவார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us