Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/அதிக கடன் வாங்கிய மாநிலங்கள்; தமிழகம் தொடர்ந்து முதலிடம்

அதிக கடன் வாங்கிய மாநிலங்கள்; தமிழகம் தொடர்ந்து முதலிடம்

அதிக கடன் வாங்கிய மாநிலங்கள்; தமிழகம் தொடர்ந்து முதலிடம்

அதிக கடன் வாங்கிய மாநிலங்கள்; தமிழகம் தொடர்ந்து முதலிடம்

UPDATED : மே 13, 2025 12:36 AMADDED : மே 13, 2025 12:31 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: அதிகம் கடன் பெற்ற மாநிலங்களின் பட்டியலில், கடந்த நிதியாண்டிலும் தமிழகம் முதல் இடத்தில் தொடர்வதாக ரிசர்வ் வங்கி தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தகவல்கள்


* கடந்த 2020 - 21ம் நிதியாண்டு முதல், தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக, கடந்த நிதியாண்டிலும் தமிழகம் தான் அதிக மதிப்பிலான கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளது

* கடந்த பிப்ரவரி மாதம் வரையிலான 2024 - 25ம் நிதியாண்டின் முதல் 11 மாதங்களில், 1.01 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது

* பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க, வழக்கமாக மார்ச் மாதத்தில் தான் மாநிலங்கள் அதிக கடன் பெறும் என்பதால், நிதியாண்டின் முடிவில் கடன் தொகை இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது

* நடப்பு நிதியாண்டில் சந்தை வாயிலாக 1,36,500 கோடி ரூபாய் கடன் பெற தமிழகம் திட்டம்Image 1417303

* முதல் காலாண்டில் மட்டும் 20,000 கோடி ரூபாய் திரட்ட திட்டம்

* 15வது நிதி கமிஷனின் நிபந்தனைகளின்படி, அதிகபட்சமாக ஒரு மாநிலத்தின் கடனுக்கும், மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையேயான விகிதம் 28.70 சதவீதத்திற்குள் இருக்க வேண்டும்

Image 1417304* தமிழகத்தை பொறுத்தவரை கடந்த நிதியாண்டில் இது 26.43 சதவீதமாகவும்; நடப்பு நிதியாண்டில் 26.07 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us