'த்ருக்' கணித பஞ்சாங்கப்படி 29ல் சனிப் பெயர்ச்சி
'த்ருக்' கணித பஞ்சாங்கப்படி 29ல் சனிப் பெயர்ச்சி
'த்ருக்' கணித பஞ்சாங்கப்படி 29ல் சனிப் பெயர்ச்சி

பஞ்சாங்க வகைகள்
நம் நாட்டில், பழங்காலம் முதல் பின்பற்றப்பட்டு வரும், திதி, வார, மாத, யோக, நட்சத்திர நாட்குறிப்பை பஞ்சாங்கம் என்கிறோம்; வானவியல் சாஸ்திர அடிப்படையில் கோள்களின் நகர்வையும், நட்சத்திரங்களின் இருப்பையும் வைத்து பஞ்சாங்கம் கணிக்கின்றனர். நாம், இரு வகையான பஞ்சாங்கங்களைப் பயன்படுத்துகிறோம்.
அவை குறித்து, அறிவியல் வல்லுநர், த.வி.வெங்கடேஸ்வரன் கூறியதாவது:
வாக்கிய பஞ்சாங்கம், 'த்ருக்' கணித பஞ்சாங்கம் என்ற இரு வகையான பஞ்சாங்கங்கள் புழக்கத்தில் உள்ளன. வாக்கிய பஞ்சாங்கம் கும்பகோணத்தில் அமைந்திருந்த காஞ்சி மடம் தயாரித்தது; த்ருக் கணித பஞ்சாங்கத்தை, ரகுநாதாச்சாரி என்பவர் உருவாக்கினார்.
![]() |
உத்ராயணம் எப்போது?
உதாரணமாக, ஜனவரி 14, 15ல், 'உத்ராயணம்' என்று சொல்லப்படும், சூரியன் வடக்கு நோக்கி தன் பயணத்தைத் தொடரும் காலம் துவங்குகிறது என்று சொல்லப்படுகிறது; ஆனால் இவர், டிசம்பர் 21, 22ம் தேதியே, 'உத்ராயணம்' துவங்கி விடுகிறது என்று, கிரகங்களின் நகர்வை தொலைநோக்கி வாயிலாகக் கண்டறிந்தார்.
வாக்கியம் ஏன் தவறு?
பம்பரம் வேகமாகச் சுற்றும்போது, அதன் தலை இப்படியும் அப்படியுமாக மாறி மாறி சென்று வரும் அல்லவா... அது போலவே, பூமி தன்னைத் தானே சுற்றி, சூரியனையும் சுற்றி வரும்போது, அதன் தலை, இப்படியும் அப்படியுமாறு சாய்ந்தபடி தான் சுற்றும். அதை, ஆங்கிலத்தில், 'ப்ரெசிஷன்' என்றும், தமிழில், அயன சலனம் என்றும் சொல்வோம். அப்படி சுற்றும்போது, பஞ்சாங்கத்திற்கு ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட துவக்கப்புள்ளி மாறித்தானே போயிருக்கும்?
அதை விடுங்கள்...
தற்போதைய கிரக நிலவரங்களை நாம், 'தி பிளானட்ஸ்டுடே.காம்' என்ற இணைய தளத்தில் துல்லியமாக பார்க்கும் வசதி உள்ளது. அது, 'வெஸ்டர்ன், ஹிந்து' என இரு வகையான கிரக நிலைகளைக் காட்டுகிறது. அவை போக, 'ஜியோசென்ட்ரிக்' என வானில் நிலவும் உண்மையான கிரக நகர்வை, உள்ளது உள்ளபடி சொல்கிறது.