Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ 'தேர்தல் கமிஷனிடம் நீதி கேட்டு சென்னை, டில்லியில் போராட்டம்'

 'தேர்தல் கமிஷனிடம் நீதி கேட்டு சென்னை, டில்லியில் போராட்டம்'

 'தேர்தல் கமிஷனிடம் நீதி கேட்டு சென்னை, டில்லியில் போராட்டம்'

 'தேர்தல் கமிஷனிடம் நீதி கேட்டு சென்னை, டில்லியில் போராட்டம்'

Latest Tamil News
சென்னை: 'தேர்தல் கமிஷனிடம் நீதி கேட்டு, சென்னையில் நாளையும், டில்லியில் 4ம் தேதியும் போராட்டம் நடத்தப்படும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

நான், கடந்த 1980ல், பா.ம.க,வை துவக்கி, 46 ஆண்டுகளாக கட்சி நடத்தி வருகிறேன். சாலை, மின்சார வசதி இல்லாமல், வயல் பரப்பில் நடந்து சென்று, கட்சியை வளர்த்தோம்.

வன்னியர் உட்பட, மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம்; அருந்ததியருக்கு 3 சதவீதம்; முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் என, இட ஒதுக்கீடு பெற்று தந்தோம். பா.ம.க.,வின் முதல் தலைவராக தீரன் இருந்தார்; பின், ஜி.கே.மணி, 25 ஆண்டு காலம் செயல்பட்டார்.

கடந்த 2022ல், பொதுக்குழுவில், அன்புமணியை தலைவராக அறிவித்தேன். ஆனால், அன்புமணி சதி திட்டம் தீட்டி, 2023 பொதுக்குழுவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக போலி ஆவணங்களை வழங்கி உள்ளார்.

இதனால், வரும் 2026 வரை, பா.ம.க., தலைவர் பதவியில் அன்புமணி நீடிப்பதாக, தேர்தல் கமிஷன் கடிதம் வழங்கி உள்ளது. தேர்தல் கமிஷன் அன்புமணிக்கு உடந்தையாக இருக்கிறது. இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

இந்த ஜனநாயக படுகொலையை கண்டித்து, ஜி.கே.மணி தலைமையில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில், நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அடுத்து, தேர்தல் கமிஷனிடம் நீதி கேட்டு, வரும் 4ம்தேதி டில்லியில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us