Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ 160 தொகுதிகளில் போட்டியிட திட்டம்: கருத்துக்கணிப்பால் அ.தி.மு.க., உற்சாகம்

160 தொகுதிகளில் போட்டியிட திட்டம்: கருத்துக்கணிப்பால் அ.தி.மு.க., உற்சாகம்

160 தொகுதிகளில் போட்டியிட திட்டம்: கருத்துக்கணிப்பால் அ.தி.மு.க., உற்சாகம்

160 தொகுதிகளில் போட்டியிட திட்டம்: கருத்துக்கணிப்பால் அ.தி.மு.க., உற்சாகம்

Latest Tamil News
தமிழகத்தில் அடுத்தாண்டு நடக்கும் சட்ட சபை தேர்தலில் தனி மெஜாரிட்டியுடன் வெற்றி பெறும் வகையில், குறைந்தபட்சம் 160 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டும் என, அ.தி.மு.க., தரப்பில் முடிவெடுத்துள்ளனர்.

மீதமிருக்கும் 74 தொகுதி களை மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்கும் எண்ணத்தில் அ.தி.மு.க., தலைமை இருப்பதாகக் கூறப்படுகிறது.

நம்பிக்கை


அடுத்த சட்டசபை தேர்தல், இன்னும் பத்து மாதங்களில் நடக்க உள்ளது. அதையடுத்து, தேர்தலுக்கான முன்னோட்டப் பணிகளை அ.தி.மு.க., துவங்கி விட்டது.

வெற்றிக்கு அடிப்படையான பூத் கமிட்டிகளை வலுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை அக்கட்சி மேற்கொண்டுள்ளது.

நேற்று முன்தினம் சென்னையில், இது தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

பூத் பொறுப்பாளர்கள், 'வாட்ஸாப் குரூப்' ஆரம்பித்து, அதன் வழியாக உறுப்பினர்களிடம் தொடர்பில் இருக்க வேண்டும்; பூத்திற்கு ஒருவர், தலா 100 வாக்காளர்களை பின்தொடர வேண்டும்.

முதன் முறையாக ஓட்டளிக்கும் இளைஞர்களை இணைத்து, அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல அறிவுரைகள், அப்போது வழங்கப்பட்டன. இந்நிலையில், மீண்டும் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்துள்ளதால், வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி உறுதி என்றும் கட்சியினருக்கு பழனிசாமி, கூட்டத்தில் நம்பிக்கை வெளிப்படுத்தினார்.

மெஜாரிட்டி


நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

மொத்தமுள்ள 234 தொகுதிகளில், குறைந்தபட்சம் 160 தொகுதிகளிலாவது அ.தி.மு.க., போட்டியிட்டால் மட்டுமே, தனி மெஜாரிட்டி பெற முடியும் என அ.தி.மு.க., தலைமை நம்புகிறது.

அதனால், 160 தொகுதி களில் அ.தி.மு.க.,வை போட்டியிட வைப்பதோடு, மீதமுள்ள தொகுதிகளை பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு பிரித்துக் கொடுப்பது என, அ.தி.மு.க., தலைமை முடிவெடுத்துள்ளது.

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி அமைந்தபின், அ.தி.மு.க., தலைமையால் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. அதில், கூட்டணி 88 தொகுதிகளில் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த 2 சதவீதத்திற்கும் கீழ் ஓட்டுகள் பெற்ற 34 தொகுதிகளிலும், 2 முதல் 4 சதவீதத்திற்குள் ஓட்டுகள் பெற்ற 15 தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்தினால், மொத்தம் 137 தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளதால், கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி, அடுத்து அ.தி.மு.க., ஆட்சிதான் என்ற தெம்பில் உள்ளார்.

தன்னை சந்திக்கும் கட்சியின் தலைவர்களிடம் இதை வலியுறுத்திச் சொல்கிறார். இதனால், கட்சியினர் உற்சாகம் அடைந்து, இப்போதே தேர்தல் பணிகளை பல இடங்களில் துவங்கி விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்

-நமது நிருபர்-.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us