ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு 'செக்' வைக்க தேர்தல் கமிஷனில் மனு
ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு 'செக்' வைக்க தேர்தல் கமிஷனில் மனு
ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு 'செக்' வைக்க தேர்தல் கமிஷனில் மனு

வேட்புமனு தாக்கல்
தமிழகத்துக்கான ராஜ்யசபா தேர்தலில், வரும் ஜூன் 2ல் வேட்புமனு தாக்கல் துவங்க உள்ளது. ஜுன் 19ம் தேதி, ஓட்டுப்பதிவு நடைபெறும் என்றும், அன்றைய தினமே ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நேற்று தலைமை தேர்தல் ஆணையத்தில், தமிழகத்தில் இருந்து புதிதாக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுக்களால், திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க., முன்னாள் நிர்வாகி புகழேந்தி சார்பில், தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கலாகி இருக்கும் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஏ மற்றும் பி படிவங்கள்
தமிழகத்தைச் சேர்ந்த ஆறு ராஜ்யசபா எம்.பி.,க்களின் பதவிக்காலம் முடியப் போவதால், அதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், கடந்த 2023 பிப்., 3ம் தேதி அன்று, இரட்டை இலை சின்னம் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த தீர்ப்பின்படி, அப்போது நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலுக்காக மட்டுமே, அ.தி.மு.க.,வுக்கு, இரட்டை இலை சின்னம் வழங்கப்படுவதாகவும், அதைத்தாண்டி, வேறு எந்தத் தேர்தலுக்கும், அந்த சின்னம் வழங்கப்படக்கூடாது என்றும், தெரிவிக்கப்பட்டிருந்தது.
உரிமை கிடையாது
எனவே, பழனிசாமி மட்டுமல்ல; அ.தி.மு.க.,வின் எந்த அணியினருக்குமே, ராஜ்யசபா தேர்தலுக்கான ஏ மற்றும் பி பார்ம்களில், அ.தி.மு.க.,வின் சார்பில் கையெழுத்துபோடுவதற்கும், உரிமை கிடையாது. இதனால், நடக்கவிருக்கும் ராஜ்யசபா தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் யாரையும் வேட்பாளர்களாக நிறுத்த முடியாது. மீறி நிறுத்தினால், தேர்தல் கமிஷன் அதை அனுமதிக்கக்கூடாது.