பன்னீர் வரலாம்; தினகரன் கூடாது நாகேந்திரனிடம் சொன்ன இபிஎஸ்.,
பன்னீர் வரலாம்; தினகரன் கூடாது நாகேந்திரனிடம் சொன்ன இபிஎஸ்.,
பன்னீர் வரலாம்; தினகரன் கூடாது நாகேந்திரனிடம் சொன்ன இபிஎஸ்.,

தமிழக பா.ஜ., தேர்தல் பிரசாரம், பிரதமர், உள்துறை அமைச்சர் பங்கேற்கும் பொதுக் கூட்டம் குறித்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியுடன், பா.ஜ., மாநில தலைவர் நாகேந்திரன் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியை, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள, அவரது வீட்டில், தமிழக பா.ஜ., மேலிடப் பார்வையாளர் அரவிந்த் மேனன், மாநிலத் தலைவர் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
ஒரு மணி நேர நடந்த சந்திப்பு குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
பா.ஜ.,வுக்கு 25 தொகுதிகள் வரை ஒதுக்கீடு செய்ய, அ.தி.மு.க., இசைவு தந்துள்ளது.
ஆனால், லோக்சபா தொகுதிக்கு ஒரு சட்டசபை தொகுதி என்ற அடிப்படையில், 39 தொகுதிகளும், சிறிய கட்சிகளுக்கு ஒதுக்குவதற்கு 11 தொகுதிகள் என, 50 தொகுதிகளும் ஒதுக்கும்படி, மீண்டும் தமிழக பா.ஜ., தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சேலத்தில் அமித் ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டம், திருநெல்வேலியில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம் நடத்துவது குறித்தும், இரு கட்சி கூட்டங்களிலும், இரண்டு கட்சியினரும் பங்கேற்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அக்., 1ல் மதுரை தெற்கு சட்டசபை தொகுதியில், முதல் கட்ட பிரசாரத்தை நாகேந்திரன் துவக்க உள்ளார்.
இதில் பங்கேற்க பழனிசாமிக்கு, நாகேந்திரன் அழைப்பு விடுத்தார். தே.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கும் பன்னீர்செல்வம் மற்றும் தினகரன் ஆகியோரை மீண்டும் கூட்டணியில் சேர்ப்பது குறித்தும் பேசி உள்ளனர்.
அப்போது, பன்னீர்செல்வத்துக்கு மட்டும் இசைவு தெரிவித்த பழனிசாமி, தினகரனை ஏற்க முடியாது என கூறிவிட்டார்.
இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன
- நமது நிருபர் - .