பழனிசாமியால் தான் எல்லாம் கிடைத்தது; பட்டியல் போட்டு பேசுகிறார் உதயகுமார்
பழனிசாமியால் தான் எல்லாம் கிடைத்தது; பட்டியல் போட்டு பேசுகிறார் உதயகுமார்
பழனிசாமியால் தான் எல்லாம் கிடைத்தது; பட்டியல் போட்டு பேசுகிறார் உதயகுமார்

தஞ்சாவூர், : தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுார் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு நீதி கிடைத்திடவும், பாலியல் வன்கொடுமைகளை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் தி.மு.க., அரசைக் கண்டித்தும், தஞ்சாவூரில் நேற்று அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:
பாழாய் போன தி.மு.க., ஆட்சிக்கு பாலியல் சம்பவங்களே சாட்சி. முதல்வர் கையில் உள்ள போலீசாருக்கே பாதுகாப்பு இல்லை. பிறகெப்படி அவர் தமிழகத்து பெண்களை காப்பார்.
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 23 சதவீதம் அதிகரித்துள்ளது. இதுவரை, 18,200 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தி.மு.க., கரைவேட்டி கட்டியவர்கள் பலரே, கொடூரமான பல காரியங்களை செய்கின்றனர்.
தி.மு.க.,வில் 39 எம்.பி.,க்கள் உள்ளனர். ஆனால், 100 நாள் வேலை திட்டத்துக்கான சம்பளத்தைக் கூட முதல்வர் ஸ்டாலினால், மத்திய அரசிடம் இருந்து பெற முடியவில்லை.
![]() |
ஒரே வாரத்தில், அவர் வைத்த பல கோரிக்கைகளுக்கும் பலன் கிடைத்துள்ளன. இப்படி தமிழக நலன்களுக்கான எல்லா நல்ல காரியங்களும் பழனிசாமியால் மட்டுமே நடந்துள்ளன. தமிழக முதல்வர்களில் சிறந்த முதல்வராக பழனிசாமி இருந்துள்ளார்; இனியும் இருப்பார்.
நிடி ஆயோக் கூட்டத்தில் மூன்று ஆண்டுகளாக கலந்து கொள்ளாத முதல்வர், திடுமென இம்முறை கலந்து கொண்டிருக்கிறார். தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது; அதனால், தன்மானம் உள்ள நான் அங்கு செல்ல மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருந்தவர், இப்போது மட்டும் தன்மானத்தை விட்டு விட்டாரா?
முதல்வர் குடும்பத்தைச் சேர்ந்த 26 வயது தம்பி, இரண்டே ஆண்டுகளில், 1,000 கோடி ரூபாய்க்கும் மேல் கொள்ளையடித்திருக்கிறார்; அதை, சினிமா துறையில் முதலீடு செய்திருக்கிறார்.
பழனிசாமி மீண்டும் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.