ADDED : ஜூன் 20, 2025 04:25 AM

கோவையில், 'அரபிக் கல்லுாரி' போர்வையில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்காக, நான்கு பேர் ஆள் சேர்த்து வந்துள்ளனர் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கடந்த, 2022 கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடந்த, பயங்கரவாத குண்டு வெடிப்பு தாக்குதலை, வெறும் சிலிண்டர் விபத்து என, தி.மு.க., அரசு பூசி மொழுக முயன்றது.
ஆனால், இச்சம்பவத்தை அடுத்து தொடர்ச்சியாக, பயங்கவராத அமைப்புகளை சார்ந்தோர், தேசிய புலனாய்வு அமைப்பால், கோவையில் கைது செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. ஒருபுறம் தொடர்ச்சியாக நடந்து வரும் முதியோர் கொலை, மறுபுறம் கோவில் சிலைகள் சேதம். இதற்கிடையில் மனதை அதிர வைக்கும் அளவுக்கு, பயங்கரவாத அமைப்பினரின் புழக்கம் என, கோவை சுற்று வட்டாரப் பகுதிகளை, மொத்தமாக அச்சுறுத்தல் வளையத்திற்குள் வைத்து, மக்கள் பாதுகாப்பை கேள்வி குறியாக்கியுள்ளது தி.மு.க., அரசு. மொத்தத்தில், பயங்கரவாதத்தில் புகலிடமாக கோவை மாறி இருக்கிறது.