மரத்தடியில் பாடம் நடத்துவது கேவலமாக தெரியவில்லையா? மகேஷுக்கு பா.ஜ., கேள்வி
மரத்தடியில் பாடம் நடத்துவது கேவலமாக தெரியவில்லையா? மகேஷுக்கு பா.ஜ., கேள்வி
மரத்தடியில் பாடம் நடத்துவது கேவலமாக தெரியவில்லையா? மகேஷுக்கு பா.ஜ., கேள்வி
ADDED : ஜூன் 26, 2025 04:54 AM

சென்னை, : தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை:
திருநீறு, குங்குமம், ருத்ராட்சம் அணியக்கூடாது என சொல்கின்ற அமைச்சர் மகேஷ், பள்ளிகளில் ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்று சொல்வாரா?
பள்ளிக்குழந்தைகள், கோவில்களில் சாமியிடம் வைத்த, பல நிறங்களில் உள்ள கயிறு கட்டும் வழக்கம் இருப்பது, நாம் அறிந்ததே.
ஆன்மிக அடையாளமான, கயிறு, ருத்ராட்சத்தை அணியக்கூடாது என, இவர்களின் மதச்சார்பற்ற பள்ளிகள்தான் கட்டுப்பாடுகள் விதிக்கின்றன.
ருத்ராட்சம் அணிவது, ஜாதி பேதங்களை தகர்க்கும்; ஆன்மிகத்தை வளர்க்கும் என, அண்ணாமலை கூறியது, இவர்களுக்கு ஏன் உறுத்துகிறது.
காரணம், ஹிந்து என்ற ஒரே குடையில், அனைத்து ஜாதியினரும் வந்து விட்டால், இவர்கள் அரசியல் செய்ய முடியாமல் போய்விடும்.
ஏழை, பணக்காரன் வித்தியாசத்தை போக்க, காமராஜர் சீருடை திட்டம் கொண்டு வந்தார் என சொல்கிறார் மகேஷ்.
ஆனால், கொள்ளையடித்த பணத்தை, வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கிறார் என, அதே காமராஜர் மீது அவதுாறு பரப்பியவர்கள் இவர்கள்.
அமைச்சருக்கு பள்ளிக்குள் ருத்ராட்சம் அணிவது பிற்போக்குத்தனமாக தெரிகிறது. ஆனால், பள்ளிக்கூடமே இல்லாமல், மரத்தடியில் பாடம் நடத்தப்படுவது, கேவலமாகத் தெரியவில்லை.
திருநீறு வைப்பதை அனுமதிக்கலாமா, வேண்டாமா என யோசிப்பதை விட்டுவிட்டு, ஆண்டுதோறும் 50,000 மாணவர்கள் தமிழில் பெயிலாவதை தடுப்பது எப்படி என யோசியுங்கள்.
எட்டாம் வகுப்பு மாணவனுக்கு, ஐந்தாம் வகுப்பு கணக்கு தெரியவில்லை. இதுதான் பள்ளிக்கல்வித்துறை லட்சணம். இதில் பிற்போக்குத்தனம் குறித்து பாடம் எடுப்பது, சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.