கரூரில் விஜய் பிரசாரத்தை முறியடிக்க: தி.மு.க.,வின் 'டேக் டைவர்ஷன்' திட்டம்
கரூரில் விஜய் பிரசாரத்தை முறியடிக்க: தி.மு.க.,வின் 'டேக் டைவர்ஷன்' திட்டம்
கரூரில் விஜய் பிரசாரத்தை முறியடிக்க: தி.மு.க.,வின் 'டேக் டைவர்ஷன்' திட்டம்
ADDED : செப் 26, 2025 01:19 AM

கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தில், தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்காமல் தடுக்க, அக்கட்சி நிர்வாகிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்குவதுடன், வாகனங்களில் வருவோரை திசைதிருப்ப , 'டேக் டைவர்ஷன்' திட்டத்தை செயல்படுத்த, கரூர் மாவட்ட தி.மு.க., திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
த.வெ.க., தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், வரும் டிச., 20ம் தேதியுடன் முடிவதாக இருந்தது. ஆளும் கட்சி தரப்பில் அனுமதி தருவதில் இழுபறி ஏற்படுத்துவதால், அடுத்த ஆண்டு பிப்., 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதிர்வலை மக்கள் சந்திப்பு பயணத்தில் அவரது பேச்சு, தி.மு.க., வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அவர் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நாளை கரூரில் நடிகர் விஜய் மக்களை சந்திக்கிறார். அவரது சுற்றுப்பயணத்தை தோல்வி அடைய வைக்க, கரூர் மாவட்ட தி.மு.க., களமிறங்கி உள்ளது.
த.வெ.க., தொண்டர்களுக்கு மொபைல் போன், டி - சர்ட், பேன்ட் போன்ற பரிசுகள் வழங்கி, தங்கள் பக்கம் திருப்பி வருகின்றனர்.
இது குறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
கரூர் மாவட்டம் தி.மு.க., கோட்டை என்பதை நிரூபிக்க, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தி.மு.க., முப்பெரும் விழாவை பிரமாண்டமாக நடத்திக் காட்டினார். தற்போது, கரூரில் விஜய் மக்கள் சந்திப்பு பயணம் வெற்றி அடையாமல் இருக்க, அதிரடி திட்டத்தோடு களமிறங்கி உள்ளார்.
அதன்படி, த.வெ.க., நிர்வாகிகள், தொண்டர்களை இழுக்கும் வேலை நடக்கிறது. அவர்களுக்கு மொபைல் போன், டி - சர்ட், பேன்ட் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இதை தடுக்க முடியாமல், த.வெ.க.,வினர் திணறி வருகின்றனர்.
தங்கள் நிர்வாகிகள் குறித்த விபரங்களை பேனர்களில் போட வேண்டாம்; மாவட்டச் செயலர் படத்தை மட்டும் போட்டால் போதும் என த.வெ.க., தலைமையில் இருந்து உத்தரவிடப்பட்டுள்ளது.
4 இடங்கள் விஜய் பேசுவதற்கு, கரூர் லைட் ஹவுஸ் கார்னர், வெங்கமேடு எம்.ஜி.ஆர்., சிலை, ஈரோடு வேலுசாமிபுரம், 80 அடி சாலை ஆகிய நான்கு இடங்களை, த.வெ.க.,வினர் தேர்வு செய்தனர்.
ஆனால், போலீஸ் தரப்பில், வேலுசாமிபுரம் பகுதியில் மட்டும் பிரசாரம் செய்ய இடம் ஒதுக்க முடிவெடுத்துள்ளனர்.
கரூர் மாநகருக்குள் அணிவகுக்கும் விஜய் ஆதரவாளரின் வாகனங்களை தடுக்கும் திட்டமாக, சாலை பணியை காரணம் காட்டி, 'டேக் டைவர்ஷன்' வாயிலாக, வேறு பாதைக்கு திருப்பி விடும் திட்டமும் உள்ளது.
இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் கூறின
- நமது நிருபர் - .