Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ தி.மு.க., எடுத்த 'சர்வே' முடிவால் காங்., - எம்.எல்.ஏ.,க்களுக்கு சிக்கல்

தி.மு.க., எடுத்த 'சர்வே' முடிவால் காங்., - எம்.எல்.ஏ.,க்களுக்கு சிக்கல்

தி.மு.க., எடுத்த 'சர்வே' முடிவால் காங்., - எம்.எல்.ஏ.,க்களுக்கு சிக்கல்

தி.மு.க., எடுத்த 'சர்வே' முடிவால் காங்., - எம்.எல்.ஏ.,க்களுக்கு சிக்கல்

UPDATED : மார் 22, 2025 01:24 AMADDED : மார் 22, 2025 01:20 AM


Google News
Latest Tamil News
ஆளுங்கட்சி ஆதரவு தேர்தல் வியூக நிறுவனம் சார்பில், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் சமீபத்தில் 'சர்வே' எடுக்கப்பட்டு உள்ளது. அதில், தமிழக காங்கிரசைச் சேர்ந்த 11 எம்.எல்.ஏ.,க்களுக்கு, தொகுதி மக்களிடம் நல்ல பெயர் இல்லை என தெரிய வந்துள்ளதால், வரும் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் தொகுதிகளில் கைவைக்க தி.மு.க., திட்டமிட்டுள்ளது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் 25 தொகுதிகளில் போட்டியிட்டு, 18ல் வெற்றி பெற்றது. அதில், ஈரோடு கிழக்கு தொகுதி, தி.மு.க.,வுக்கு கைமாறியதால், தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 17 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்; 12 எம்.எல்.ஏ.,க்கள் புதிய முகங்களாக உள்ளனர்.

மூன்றாவது முறை எம்.எல்.ஏ.,க்களாக பிரின்ஸ், முனிரத்தினம் ஆகியோரும், இரண்டாவது முறை எம்.எல்.ஏ.,க்களாக ராஜேஷ்குமார், ராஜ்குமார், கணேஷ் ஆகியோரும் உள்ளனர். புதிய முகங்கள் மற்றும் பழைய முகங்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 11 எம்.எல்.ஏ.,க்கள் மீது, தொகுதி மக்களிடம் அதிருப்தி வலுவாக இருப்பதாக, தி.மு.க., வியூக வகுப்பு நிறுவனம் எடுத்த சர்வே முடிவில் தெரியவந்துள்ளது.

அதனால், அந்த தொகுதிகளில் தி.மு.க., போட்டியிட முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக, காங்கிரசுக்கு வேறு தொகுதிகள் தரப்படலாம் அல்லது எண்ணிக்கை குறைக்கப்படலாம் என, அறிவாலய வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இது குறித்து, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது:


தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஜூனியர் எம்.எல்.ஏ., அடிக்கடி வெளிநாடு சென்று விடுவார். தொகுதி பக்கம் அவரை பார்க்கவே முடியாது. அவருக்கும், மாவட்ட அமைச்சருக்கும் ஏழாம் பொருத்தமாக இருப்பதால், 'போஸ்டர்' யுத்தம் நடத்தி, கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி வைத்துள்ளார்.

அதே தென் மாவட்டத்தில் புதுமுகமாக இருக்கிற மற்றொரு எம்.எல்.ஏ.,வின் தொகுதியில், அரசு திட்டப் பணிகள் நடந்தாலும், முதலில் 22 சதவீதம் கமிஷனை அவருக்கு கொடுத்து விட வேண்டும்.

காங்கிரஸ் நிர்வாகிகள், கட்சிக்கு நிதி கேட்டு சென்றால், 'நீங்கள் யாருன்னு எனக்கு தெரியாது' என கூறி விடுவார்.

பொதுமக்கள் சென்றால், 'நீங்கள் என் தொகுதியா?' என கேட்டு மிரள வைப்பார். ஆளுங்கட்சி நிர்வாகிகளையும், 'தேர்தல் நேரத்தில் நான் கொடுத்த பணத்தை செலவு செய்யாமல் அமுக்கி விட்டீர்களே' என சொல்லி அலற வைத்து விடுவார்.

வட மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர், குடும்ப அந்தஸ்துக்காக தான் எம்.எல்.ஏ.,வாக இருக்கிறாரே தவிர, தொகுதி மக்களை சந்திக்கவே விரும்ப மாட்டார். இது போன்றவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தருவதை காங்கிரஸ் விரும்பினாலும், நாங்கள் விடமாட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -





      Our Apps Available On




      Dinamalar

      Follow us