டில்லி உஷ்ஷ்ஷ்: நெருக்கடியில் மஹாராஷ்டிரா முதல்வர்
டில்லி உஷ்ஷ்ஷ்: நெருக்கடியில் மஹாராஷ்டிரா முதல்வர்
டில்லி உஷ்ஷ்ஷ்: நெருக்கடியில் மஹாராஷ்டிரா முதல்வர்
ADDED : மார் 23, 2025 02:45 AM

மும்பை: மஹாராஷ்டிராவில் பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சட்டசபையில், 288 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இதில், பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த, 238 பேர் உள்ளனர். அதாவது, மொத்த எம்.எல்.ஏ.,க்களில் 82 சதவீதம் பா.ஜ., கூட்டணி. ஆனாலும், கடந்த நான்கு மாதங்களாக முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் திண்டாடி வருகிறார்.
ஒரு பக்கம், கூட்டணியில் உள்ள சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்கு சரியான பதவிகள் தரப்படவில்லை என, வெறுப்பில் உள்ளனர். இன்னொரு பக்கம், பா.ஜ.,விலேயே குழப்பம் நிலவுகிறது. 'புதிதாக வந்தவர்களுக்கு பதவிகளை அள்ளிக் கொடுத்து, சீனியர்களை மட்டம் தட்டிவிட்டனர்' என, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் கோபத்தில் உள்ளனர். இதற்கிடையே, அவுரங்கசீப் கல்லறை விவகாரம் வேறு ஆட்சியை களங்கப்படுத்திவிட்டது. முதல்வர் வசம் உள்துறை இருப்பதால், கடுமையான விமர்சனத்திற்கு ஆளானார் பட்னவிஸ்.
'வெற்றி பெறுவதற்காக, பா.ஜ., கூட்டணி அறிவித்த இலவசங்கள் அரசு கஜானாவை காலியாக்கி விட்டன. மஹாராஷ்டிரா இப்போது, 9.2 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. இந்நிலையில், பட்னவிஸ் எப்படி கட்சிக்குள்ளும், வெளியேயும் உள்ள எதிர்ப்புகளையும், நிதி நிலையையும் சமாளிக்கப் போகிறார்?' என, அவருடைய எதிரிகள் காத்திருக்கின்றனர்.