கம்யூ., அவதூறு; பா.ஜ., நிர்வாகி மண்டை உடைப்பு
கம்யூ., அவதூறு; பா.ஜ., நிர்வாகி மண்டை உடைப்பு
கம்யூ., அவதூறு; பா.ஜ., நிர்வாகி மண்டை உடைப்பு

மருத்துவமனையிலும் தொடர்ந்த அடிதடி
காயமடைந்த ஹிந்து முன்னணி நிர்வாகிகளை காண பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்பினர் மருத்துக்கல்லுாரி மருத்துவமனையில் திரண்டனர். அதுபோல மார்க்சிஸ்ட் கட்சியினரும் அங்கு திரண்டனர். இருதரப்பினரும் மாறிமாறி கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். மார்க்சிஸ்ட் கட்சியினரை அப்புறப்படுத்தியபோது மறியலில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர்.
விவேகம் இல்லையே
மோதலை தொடர்ந்து இரு டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் 50 க்கு மேற்பட்ட போலீசார் குவிந்திருந்தனர். முதலில் போலீசார் கலைந்து செல்ல அறிவுறுத்தியபோது பா.ஜ.,வினர், ஹிந்து அமைப்பினர் கலைய தயாராகினர். அதேநேரம் கம்யூ., வை சேர்ந்த பெண் நிர்வாகிகள் போலீசாரின் அறிவுறுத்தலையும் மீறி ரோட்டில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி மோதலுக்கு வழிவகுத்தனர்.
ஹிந்து முன்னணி கண்டனம்
ஹிந்து முன்னணி மாநில செயலாளர் செந்தில் குமார் அறிக்கை : முருகன் மாநாட்டை இழிவாக பேசிய நக்சல் பயங்கரவாதிகளை அரசு இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும். ஹிந்து அமைப்பினர் மீது கொலை வெறிதாக்குதல் நடத்தி உள்ளர் . ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் பிரசாரத்திற்கு அரசு அனுமதி அளித்ததே இதற்கு காரணம். இதுபோன்ற விஷயங்களுக்கு அனுமதியளிக்க கூடாது. கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.