Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/இலவசம் என்று கூறி தவணையில் ஆட்டோ; த.வெ.க., நிர்வாகிகளால் கட்சியில் சலசலப்பு

இலவசம் என்று கூறி தவணையில் ஆட்டோ; த.வெ.க., நிர்வாகிகளால் கட்சியில் சலசலப்பு

இலவசம் என்று கூறி தவணையில் ஆட்டோ; த.வெ.க., நிர்வாகிகளால் கட்சியில் சலசலப்பு

இலவசம் என்று கூறி தவணையில் ஆட்டோ; த.வெ.க., நிர்வாகிகளால் கட்சியில் சலசலப்பு

Latest Tamil News
சென்னை : இலவசம் என்று கூறி அழைத்துச் சென்று, தவணை முறையில் கடனுக்கு ஆட்டோ வழங்குவதால், த.வெ.க.,வில் திடீர் சலசலப்பு எழுந்துள்ளது.

த.வெ.க.,வில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்டச் செயலர்கள், கட்சியை பரபரப்பாக காட்டுவதற்கும் மக்களிடையே நன்மதிப்பை பெறுவதற்கும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இதற்காக, திராவிட இயக்கங்களில் நடத்தப்படுவது போன்ற நலத் திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்கின்றனர்.

த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளை அழைத்துச் சென்று, நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர். இதற்கான செலவை, தற்போதுள்ள நிர்வாகிகள் மட்டுமின்றி, கட்சியில் புதிதாக பதவியை விரும்புவோரும் செய்கின்றனர்.

மற்ற கட்சிகளில், நலத்திட்ட உதவிகள் இலவசமாக மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆனால், த.வெ.க.,வில், வங்கிகளில் தவணை கட்டணம் செலுத்தும் வகையில், ஆட்டோக்கள் வழங்கப்படுகின்றன. இலவசம் என நினைத்து, ஆட்டோக்களை வாங்க, பலரும் ஆர்வம் காட்டி நிகழ்ச்சிகளுக்கு வருகின்றனர்.

ஆனால், ஆட்டோக்களுக்கு முன்பணம் மட்டுமே செலுத்தப்பட்டு உள்ளது; ஆட்டோக்களைப் பெறுவோர், அதன் வாயிலாக சம்பாதிக்கும் பணத்தில் இருந்து தவணைத் தொகை செலுத்த வேண்டும் என அறிவிக்கின்றனர். இதனால், நலத்திட்ட உதவி நிகழ்ச்சிகள் வாயிலாக ஆட்டோக்களைப் பெறுவோர், கடும் அதிர்ச்சிக்கு ஆளாகின்றனர்.

இலவசம் என அழைத்து வந்து பின், தவணை கட்ட வேண்டும் என்று சொன்னதும், ஆட்டோக்களை பெறுவோர், மாவட்ட நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். இதனால் த.வெ.க., சார்பில் நடத்தப்படும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சிகளில் சலசலப்பு ஏற்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us