Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ அரசியல் வேண்டாம் என்றவர் மீண்டும் வருவதன் மர்மம் என்ன?

அரசியல் வேண்டாம் என்றவர் மீண்டும் வருவதன் மர்மம் என்ன?

அரசியல் வேண்டாம் என்றவர் மீண்டும் வருவதன் மர்மம் என்ன?

அரசியல் வேண்டாம் என்றவர் மீண்டும் வருவதன் மர்மம் என்ன?

ADDED : ஜூலை 19, 2024 12:39 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

'அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என சொன்ன சசிகலா, இப்போது மீண்டும் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதன் மர்மம் என்ன' என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பினார்.

ஆடி மாதத்தில் சுற்றுப்பயணம் என்ற பெயரில் சுற்றுலா பயணம் சென்றுள்ளார் சசிகலா. கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது. அ.தி.மு.க., தொண்டர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம் இது. 33 ஆண்டு காலம் ஜெயலலிதாவுடன் இருந்து ஆட்சி நிர்வாகத்தை கவனித்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறார் சசிகலா. அவர் சார்ந்த சமூக மக்களுக்காக கூட எதையும் செய்யாதவர். ஜெயலலிதாவின் பின்புலத்தை காட்டி சுயநலமாக தன்னை வளர்த்துக் கொண்டார்.

திருநாவுக்கரசர், காளிமுத்து, சேடப்பட்டி முத்தையா போன்றோரின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானதற்கு சசிகலா தான் காரணம். வசதி இருந்தும், வாய்ப்பு இருந்தும் சசிகலா மக்களுக்கு எதுவும் செய்ததில்லை. அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என சொன்ன சசிகலா, இப்போது மீண்டும் அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்வதன் மர்மம் என்ன? அ.தி.மு.க., மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், ஜானகி ஒதுங்கியது போல சசிகலாவும் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்

- நமது நிருபர் -.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us