பிற மாநிலங்கள் மானியம் வழங்கும் நிலையில் தமிழகத்தில் ஜவுளித்துறை மின் கட்டணம் அதிகம்
பிற மாநிலங்கள் மானியம் வழங்கும் நிலையில் தமிழகத்தில் ஜவுளித்துறை மின் கட்டணம் அதிகம்
பிற மாநிலங்கள் மானியம் வழங்கும் நிலையில் தமிழகத்தில் ஜவுளித்துறை மின் கட்டணம் அதிகம்
UPDATED : ஜூலை 25, 2024 04:00 AM
ADDED : ஜூலை 25, 2024 12:12 AM

திருப்பூர், : சில மாநிலங்கள் மானியம் வழங்கி வரும் நிலையில், தமிழகத்தல், தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் அதிகமாக இருப்பதால், பனியன் இடம்பெயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, தொழில்துறையினர் கவலை அடைந்துள்ளனர்.
நாட்டின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில், தமிழகம் முதலிடத்தில் இருந்து வருகிறது. குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களை காட்டிலும், தமிழகம் ஏற்றுமதி வர்த்தகத்திலும் முன்னிலையில் இருந்து வருகிறது.
தேவையான நிலம், யூனிட்டுக்கு இரண்டு ரூபாய் மானியத்துடன் மின்சார வசதி, மிகக்குறைந்த சம்பளத்தில் தொழிலாளர் என, அனைத்து வசதிகளும் அளிப்பதாக, பீஹார், குஜராத், மத்திரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநில அரசுகள் அழைப்புவிடுத்து வருகின்றன. தமிழகத்தில், மின் கட்டணம் அதிகம் என்ற தகவல் பரவியுள்ளது.
தற்போதுள்ள நிலையில், ஜவுளித்தொழில்துறையினர் பயன்படுத்தும் மின்சார கட்டணம், பெரும்பாலான மாநிலங்களில்குறைவு; தமிழகத்தில் அதிகம் என்கின்றனர், திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர்.
கவலையளிக்கும் மின் கட்டணம்
ஜவுளித்தொழிலிலில், யூனிட் அடிப்படையிலான மின் கட்டணம் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. ராஜஸ்தான், 7.59 ரூபாய், பஞ்சாப்- 7.81 ரூபாய், கர்நாடகா - 8.37 ரூபாய், ஆந்திரா -8.62 ரூபாய், தெலுங்கானா -8.74 ரூபாய், தமிழகம் - 9.09 ரூபாய் என்ற அளவில் இருப்பதாக, தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, மின் கட்டணம் குறைவாக இருக்கும் மாநிலங்களில், குறு, சிறு தொழில்களுக்கு, யூனிட்டுக்கு இரண்டு முதல், 2.50 ரூபாய் வரை மானியம் வழங்கி, தொழில்துறையினரை வரவேற்கின்றனர்.
திருப்பூரில் உற்பத்தியான பின்னலாடைகள், வடமாநிலங்களுக்கு சென்று கொண்டிருந்த நிலை மாறி, பாலியஸ்டர் 'பேப்ரிக் 'மூலமாக, ஆடைகள் தயாரித்து, திருப்பூரிலேயே போட்டி மார்க்கெட் நடத்த துவங்கிவிட்டனர். இதுவரை, வெளி நாடுகளுடன் தொழில் ரீதியாக போட்டியிட்ட திருப்பூர், இனி மாநிலங்களுடனும் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மின் கட்டண உயர்வு காரணமாக, அனைத்து தொழில்களிலும் செலவு அதிகரிக்கும்.
இதுகுறித்து 'டீமா' சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:
பெரிய நிறுவனங்கள் மட்டுமே தாக்குப்பிடித்து தொழிலை நடத்த முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. குறு, சிறு நிறுவனங்கள், வேறுவழி தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கின்றன.
தமிழக அரசு, புதிய முதலீடுகளை ஈர்த்து, புதிய தொழில்துவங்குவதில் அதிக ஆர்வம் செலுத்துகிறது. மாறாக, கைவசம் உள்ள நல்ல தொழிலை, பாதிப்பில் இருந்து பாதுகாக்கம் முயற்சி எடுக்கவில்லை. தமிழக அரசு, பிற மாநிலங்களில் வழங்குவது போல், குறு, சிற தொழில்துறையினருக்கு, மின்கட்டண மானியம் வழங்க வேண்டும். அதுமட்டுமே, தற்போதைய நெருக்கடி நிலைக்கு மாமருந்தாக அமையும். இவ்வாறு, அவர் கூறினார்.