'டில்லி உஷ்ஷ்ஷ்..' மூன்று அதிகார மையங்கள்!
'டில்லி உஷ்ஷ்ஷ்..' மூன்று அதிகார மையங்கள்!
'டில்லி உஷ்ஷ்ஷ்..' மூன்று அதிகார மையங்கள்!
ADDED : ஜூன் 23, 2024 04:02 AM

மோடி, மூன்றாவது
முறையாக பிரதமரான பின், டில்லியில் மூன்று அதிகார மையங்கள் உருவாகி
விட்டதாக, அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதில், முதல் மையம்
ராஜ்நாத் சிங்; இவரது அரசு பங்களா வாசலில், எப்போதும் கார்கள் நின்ற வண்ணம்
உள்ளன. ராணுவ அமைச்சராக படு பிசியாக இருந்தாலும், சந்திரபாபு நாயுடு,
நிதீஷ் குமார் உட்பட அனைத்து கூட்டணி கட்சிகளுடன் இவர் தான் பேசி
வருகிறார்; இதனால், எப்போதும் இவரது வீட்டில் கூட்டம் தான்.
அடுத்தவர்,
உள்துறை அமைச்சர் அமித் ஷா. டில்லியின் கிருஷ்ண மேனன் சாலையில் இவரது வீடு
உள்ளது. இங்கும் எப்போதும் கூட்டம் தான்; இந்த சாலையில் தடுப்புகள் வைத்து
சாலையையே டில்லி போலீசார் மூடிவிட்டனர்.
இதே சாலையில்,
இந்தியாவின் தலைமை நீதிபதி சந்திரசூட்டின் அரசு பங்களாவும் உள்ளதால்,
இப்படி ஒரு பாதுகாப்பு. 'பா.ஜ., - எம்.பி.,க்களுடன் தொடர்ந்து தொடர்பில்
அமித் ஷா இருப்பதால் தான் இப்படி கூட்டம்' என்கின்றனர்.
அடுத்தது,
பா.ஜ., தேசிய தலைவர் நட்டா. தற்போது இவர் அமைச்சராகி விட்டாலும், இன்னும்
தலைவர் பதவியில் தொடர்கிறார். அனைத்து மாநில பா.ஜ., தலைவர்கள், தொண்டர்கள்
என அனைவருடனும் இவர் தொடர்பில் இருக்கிறார். ஆனால், 'இவரை சந்திப்பது
மிகவும் கடினம்' என்கின்றனர் தொண்டர்கள்.
கூட்டணி ஆட்சி அமைந்த பின், இப்படி மூன்று அதிகார மையங்கள், பா.ஜ.,வில் உருவாகி உள்ளதாக கட்சிக்குள் பேச்சு அடிபடுகிறது.