பெண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பிய மத போதகர் கைது
பெண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பிய மத போதகர் கைது
பெண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பிய மத போதகர் கைது
ADDED : மார் 13, 2025 08:15 AM

புதுச்சேரி: பெண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பிய மதபோதகரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, திருக்கனுார் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் மொபைல் எண்ணிற்கு, கடந்த சில நாட்களாக அடையாளம் தெரியாத புதிய எண்ணில் இருந்து ஆபாச வீடியோ மற்றும் குறுஞ்செய்திகள் வந்துள்ளன. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண். இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், பெண்ணிற்கு ஆபாச வீடியோ அனுப்பிய நபர் முத்தியால்பேட்டையை சேர்ந்த மதபோதகரான இம்மானுவேல் என்ற ராஜேஷ், 46; என்பது தெரிய வந்தது. இதையடுத்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி மற்றும் போலீசார் அவரின் மொபைல் போனை பறிமுதல் ஆய்வு செய்தனர்.
அதில், இம்மானுவேல் மேலும் 10க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஆபாச வீடியோ, குறுஞ்செய்திகள் அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து இம்மானுவேலை கைது செய்து, நேற்று புதுச்சேரி கோர்ட்டில் நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.