Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ டில்லி உஷ்ஷ்ஷ்: ராகுல் மீது மம்தா கோபம்!

டில்லி உஷ்ஷ்ஷ்: ராகுல் மீது மம்தா கோபம்!

டில்லி உஷ்ஷ்ஷ்: ராகுல் மீது மம்தா கோபம்!

டில்லி உஷ்ஷ்ஷ்: ராகுல் மீது மம்தா கோபம்!

ADDED : ஜூலை 14, 2024 01:50 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: லோக்சபாவில் எதிர்க்கட்சி தலைவரான பின், அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி, பா.ஜ.,வை ஒரு பிடி பிடித்துக் கொண்டிருக்கிறார் ராகுல். 'பப்பு' என, ராகுலை கிண்டல் செய்தோர், தற்போது அவரை பாராட்டி வருகின்றனர்; மேலும், மீடியாக்களில் ராகுலின் செய்திகள் அதிகளவில் இடம் பிடித்து வருகின்றன.

இது, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடுப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர், பா.ஜ.,வை எதிர்த்தாலும், 'இண்டியா' கூட்டணியில் சேரவில்லை. சோனியாவிற்கு, மம்தா நெருக்கமாக இருந்தாலும், ராகுலுடன் நல்ல உறவில் இல்லை. பார்லிமென்ட் விவகாரங்களில், ராகுல் பிரபலமாகி இருப்பதை தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார், மம்தா.

முகேஷ் அம்பானியின் மகன் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க, மும்பை சென்றிருந்தார் மம்தா. அங்கு, இண்டியா கூட்டணி தலைவர்களான சரத் பவார், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவை சந்தித்து, 'பார்லிமென்டிற்குள்ளும், வெளியேயும் ராகுலின் நடவடிக்கைகள் பிரபலமாகி வருகின்றன. அனைத்திற்கும் ராகுல் காரணம் என, மீடியாக்கள் அவர் புகழ் பாடுகின்றன.

'கூட்டணியின் வெற்றியை, ஏதோ காங்கிரசின் தனிப்பட்ட வெற்றி போல ஒரு மாயை ஏற்படுத்தி விட்டார் ராகுல். உ பி., மே.வங்கம், தமிழகம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், பா.ஜ., பெரும் தோல்வியை சந்தித்தது. இங்கு, பா.ஜ.,வின் தோல்விக்கு ராகுலின் பங்கு பூஜ்யம். கூட்டணி கட்சிகளால் தான் பா.ஜ., தோற்றது; ஆனால், 'ராகுல் தான் காரணம்' என, காங்கிரஸ் மடைமாற்றி வருகிறது. எனவே, கூட்டணிக் கட்சிகள் தங்கள் முக்கியத்துவத்தை பறை சாற்ற வேண்டும்' என, கூறி இருக்கிறாராம் மம்தா.

இது தொடர்பாக தி.மு.க., - எம்.பி., கனிமொழியிடம் பேசியுள்ளார் மம்தா; விரைவில், 'தமிழக முதல்வர் ஸ்டாலினையும் சந்திப்பார்' என, கூறப்படுகிறது.

இது, காங்., சீனியர் தலைவர்களை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. 'இண்டியா கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார் மம்தா' என கூறும் காங்கிரசார், 'ராகுல் தான் ஹீரோ' என்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us