UPDATED : ஜூன் 29, 2024 04:04 AM
ADDED : ஜூன் 29, 2024 12:24 AM

மொபைல் போன் 'ரீசார்ஜ்' கட்டண தொகையை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
நாட்டில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள், 4ஜி மற்றும் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. வோடாபோன் நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக 2021ம் ஆண்டு இறுதியில் டெலிகாம் நிறுவனங்கள், 20 சதவீதம் வரை ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தின.
இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 12 - 25 சதவீதமும், ஏர்டெல் நிறுவனம் 10 - -21 சதவீதமும் ரீசார்ஜ் கட்டண தொகையை உயர்த்தி உள்ளன. இந்த புதிய கட்டண உயர்வு ஜூலை 3ம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.
- - நமது நிருபர் -: