'சிறுபான்மையினர் ஓட்டுகளை நம்பினால் அரசியலில் காணாமல் போய் விடுவீர்': அ.தி.மு.க.,வுக்கு அமித் ஷா எச்சரிக்கை

கட்டாயம்
'பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததால், சிறுபான்மையினர் ஓட்டுகள் கிடைக்கவில்லை. அதனால்தான் தோற்றோம' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயகுமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். வரும் 2026 சட்டசபை தேர்தலில், விஜயின் த.வெ.க., உடன் கூட்டணி அமைக்க, அ.தி.மு.க., விரும்புகிறது. விஜய் அதற்கு உடன்படவில்லை. எனவே, பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டிய கட்டாயம், அ.தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆபத்து
அப்போது, 'பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்க, எங்களுக்கு விருப்பம்தான். ஆனால், சிறுபான்மையினர் ஓட்டுள் கிடைக்காமல் போய்விடும் ஆபத்து உள்ளது' எனக் கூறியுள்ளனர். அதற்கு பதில் அளித்த அமித் ஷா, 'சிறுபான்மையினர் ஓட்டுகள் இல்லாமல் தேர்தலில் வெல்ல முடியாது என்பது மாயை. அதை ஹரியானா, திரிபுரா, மஹாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகா போன்ற மாநிலங்களில், பா.ஜ., ஏற்கனவே நிரூபித்துள்ளது.