'டில்லி உஷ்ஷ்ஷ்...!' பா.ஜ., கூட்டணியில் மீண்டும் அ.தி.மு.க.,
'டில்லி உஷ்ஷ்ஷ்...!' பா.ஜ., கூட்டணியில் மீண்டும் அ.தி.மு.க.,
'டில்லி உஷ்ஷ்ஷ்...!' பா.ஜ., கூட்டணியில் மீண்டும் அ.தி.மு.க.,
ADDED : ஜூன் 02, 2024 01:01 AM

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த அ.தி.மு.க., லோக்சபா தேர்தலுக்கு முன்பாக கூட்டணியிலிருந்து விலகி விட்டது. தேர்தலில் விஜயகாந்த் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
பா.ஜ.,வின் தேசிய தலைவர்களும், பிரதமரும் தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க.,வை அதிகமாக விமர்சிக்கவில்லை.
இந்நிலையில், திடீரென பா.ஜ., தலைமை ஒரு முக்கிய முடிவெடுத்துள்ளதாம். அ.தி.மு.க.,விற்கு நான்கு அல்லது ஐந்து சீட்கள் கிடைத்தால், எப்படியாவது அ.தி.மு.க.,வை தங்கள் கூட்டணியில் மீண்டும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான் அந்த முடிவாம்.
இதற்காக, அ.தி.மு.க., தலைவர்கள் சிலருடன் நெருக்கமாக உள்ள பா.ஜ., தலைவர்கள் பேச்சு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பா.ஜ.,விற்கு நெருக்கமான ஒரு அ.தி.மு.க., சீனியர் டில்லி வந்துள்ளாராம்; அவருடன் பா.ஜ., தலைவர் ஆலோசனை நடத்தி வருகிறாராம். 'அ.தி.மு.க., கூட்டணியில் சேருமானால், அமைச்சர் பதவியும் உண்டு' என, பேச்சு அடிபடுகிறது.