டில்லி 'உஷ்ஷ்ஷ்...!' அம்பானி மீது ஏன் கோபம்?
டில்லி 'உஷ்ஷ்ஷ்...!' அம்பானி மீது ஏன் கோபம்?
டில்லி 'உஷ்ஷ்ஷ்...!' அம்பானி மீது ஏன் கோபம்?
ADDED : ஜூலை 21, 2024 04:07 AM

சமீபத்தில், பிரபல தொழிபதிபர் முகேஷ் அம்பானி மகன் திருமணம், மும்பையில் படுவிமரிசையாக நடைபெற்றது. உலக வி.வி.ஐ.பி.,க்கள் பலர் திருமணத்தில் பங்கேற்றனர். பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட பல தலைவர்கள், இதில் பங்கேற்றனர்.
ராகுல், சோனியாவிற்கு நேரடியாக சென்று பத்திரிகை கொடுத்திருந்தார், முகேஷ் அம்பானி; ஆனால், அவர்கள் யாரும் திருமணத்தில் பங்கேற்கவில்லை. அந்த சமயத்தில், ஏதோ இரு இடத்தில் மக்களுடன் பீட்சா சாப்பிட்டு, அதை சமூக வலைதளத்தில், அம்பானி திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றோரை கிண்டலடிக்கும் வகையில் ராகுல் பதிவிட்டிருந்தார்.
திருமணத்தில் பங்கேற்ற பல, 'இண்டியா' கூட்டணி தலைவர்களுக்கு இது பிடிக்கவில்லை. பீஹாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், அவருடைய குடும்ப உறுப்பினர்கள் 28 பேருடன் திருமணத்தில் பங்கேற்றாராம்; மேலும், இதற்கான சிறப்பு விமானத்தை முகேஷ் அம்பானி ஏற்பாடு செய்திருந்தாராம். அத்துடன், திருமணத்தில் பங்கேற்க வசதியாக, 15 கார்களும் இவர்களுக்கு கொடுக்கப்பட்டுஇருந்ததாம்.
திருமண விழாவில் லாலுவிடம், 'ராகுலுக்கு என் மீது என்ன கோபம்?' என, கேட்டாராம் முகேஷ் அம்பானி. அதற்கு, 'ஹரே பாய், அதைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்' என்றாராம் லாலு. இது தான் தற்போது டில்லி வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.