கேரளாவில் மட்டுமே 100 கோடி வசூலித்த வாழ 2
ஏப் 17, 2026
Advertisement
சவின் இயக்கத்தில் ஹஷிர், ஆலன் பின் சிராஜ், அஜின் ஜாய், வினாயக் மற்றும் பலர் நடிப்பில் ஏப்ரல் 2ம் தேதி வெளியான மலையாளப் படம் "வாழ 2". இப்படம் தற்போது கேரளாவில் மட்டும் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது.
மலையாளப் படங்களில் மிக விரைவில் 100 கோடி வசூலைக் கடந்த படம் என்ற சாதனையைப் படைத்துள்ளது. அந்த சாதனையைப் படைக்க 15 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது.
மலையாளத்தில் இதற்கு முன்பு கேரளாவில் மட்டும் 100 கோடி வசூலைக் குவித்த படங்களாக 19 நாட்களில் "துடரும்" படமும் 24 நாட்களில் "லோகா" படமும் வசூலித்துள்ளன.
"வாழ 2" படம் தற்போது வரையில் மொத்தமாக 180 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளது. 200 கோடி வசூலை இந்தப் படம் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!