
சலார் படப்பிடிப்பிற்கு விசிட் அடித்த பிரித்விராஜின் மனைவி
இந்த படப்பிடிப்பு தளத்திற்கு பிரித்விராஜின் மனைவி சுப்ரியா மேனனும் விசிட் அடித்துள்ளார். இயக்குனர் பிரசாந்த் நீலுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள சுப்ரியா மேனன், “இந்தியாவின் மிகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான பிரசாந்த் நீல் படப்பிடிப்பு தளத்தில் அவர் பணிபுரிவதை நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இந்த படத்தை அவர் உருவாக்குவதை பார்க்கும்போது இன்னும் பல சாதனைகளை இந்த படம் தகர்க்கும் என தெரிகிறது. உங்களுடைய எண்ணங்களை பார்வையை அழகாக திரையில் கடத்தும் அந்த வித்தையை பார்ப்பதற்கே ஆனந்தமாக இருந்தது” என்று இயக்குனர் பிரசாந்த் நீல் குறித்து சிலாகித்து கூறியுள்ளார் சுப்ரியா மேனன்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!