
புதிய கூட்டணியில் வெற்றி பெறுவாரா ஹரி ?
அவரது மச்சானான அருண் விஜய் முன்னணிக்கு வந்த பிறகு அவரை வைத்து படம் இயக்குவீர்களா என பல முறை கேட்ட போதும் அதைத் தவிர்த்தே வந்தார். சூர்யாவுடன் இணைந்து புதிய படமொன்றை ஹரி இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பெல்லாம் வெளியிட்டார்கள். ஆனால், திடீரென அந்தப் படத்தையே கைகழுவி விட்டார்கள்.
இதனால், நொந்து போன ஹரிக்கு உடனடியாக கை கொடுத்தார் மச்சான் அருண் விஜய். இருவரும் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு முன்னரே வெளிவந்தது. இன்று அப்படத்தை பூஜையுடன் ஆரம்பித்துள்ளார்கள்.
விக்ரம், சூர்யா ஆகியோர் வேறு ஒரு தளத்தில் செல்ல வெற்றிப் படங்களைக் கொடுத்த ஹரி, அது போலவே தனது மச்சான் அருண் விஜய்க்கும் ஒரு கமர்ஷியல் திருப்புமுனையைத் தருவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.





















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!