
வாரணாசி ஸ்வீட் கடைக்காரருக்கு அஜீத் கொடுத்த இன்ப அதிர்ச்சி
அப்போது அவர் முகம் வெளிப்படவே, அதுவரை அவரை யாரோ ஒருவர் என நினைத்திருந்த கடையின் உரிமையாளரான சுபம் கேசரிக்கு வந்திருப்பது அஜீத் என்பதை எளிதில் கண்டுகொள்ள முடிந்ததாம். அதுமட்டுமல்ல, தனது கடையின் பனாரஸி ஸ்வீட்டை அஜித் ரசித்து சாப்பிட்டதுடன், கடையின் வெளியே நின்றுகொண்டே சாப்பிட்ட எளிமையும் சுபம் கேசரியை ரொம்பவே கவர்ந்து விட்டதாம். அந்த பனாரசியின் சுவைக்காகவே மறுநாள் அதே கடைக்கு வந்த அஜீத், அந்த ஸ்வீட் எப்படி செய்வது என்கிற விளக்கத்தையும் வீடியோவாக பதிவு செய்துகொண்டாராம்..
அஜீத்துடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளதுடன் இந்த தகவல்களையும் பகிர்ந்துகொண்டுள்ளார் கடைக்காரர் சுபம் கேசரி. தனது நண்பர்கள் சிலருடன் இந்த சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்த அஜித் காசி விஸ்வநாதர் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தாராம்.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!