
ஜூலை மாதத்தில் சேயோன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு!
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது "தாய் கிழவி" படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் "சேயோன்" என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக பாக்ய ஸ்ரீ போர்ஸ் நடிக்கின்றார். ரச்சில் ரெபேக்கா, அருள் தாஸ், பால சரவணன் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு உசிலம்பட்டியில் 24 நாட்கள் தொடங்கி நடைபெற்று நிறைவு பெற்றது. தற்போது சேயோன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் துவங்குகின்றனர். ஜூலை மாதத்திற்குள் முழு படப்பிடிப்பையும் நிறைவு பெற வேண்டும் என திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.




















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!