
100வது படத்தில் என்னை நடிக்க கேட்டார் : ஆர்பி சவுத்ரிக்கு அஞ்சலி செலுத்திய பின் ரஜினி பேட்டி
பின்னர் அவர் அளித்த பேட்டி : நான் அவருடன் படம் பண்ணியது இல்லை ஆனால் நல்ல நண்பர். இதுவரை 99 படங்கள் எடுத்து விட்டேன். எனது நூறாவது படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும். பின்னர் ஓய்வு பெறப் போகிறேன் என ஆதித்யராம் ஸ்டூடியோவில் நடந்த ஜெயலர் 2 படப்பிடிப்பு தளத்துக்கு வந்து ஆர்பி சவுத்ரி என்னிடம் பேசினார், நானும் கண்டிப்பாக நடிக்கிறேன் என சொன்னேன். பல கதைகள் கேட்கிறேன் என்றார்.
சிலமாதங்கள் முன்பு பல இயக்குனர்களை உருவாக்கிய ஆர்பி சவுத்ரிக்கு பெரிய பாராட்டு விழா நடத்த வேண்டும் என கேஎஸ் ரவிக்குமார் என்னிடம் சொன்னார். அது நடக்கவில்லை, தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி, அந்த கால தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் போல வலிமையானவர், தெய்வபக்தி மிக்கவர் நாணயமானவர்.
எப்பொழுதும் பிரஷ்ஷாக இருப்பார். இது எப்படி என அவரிடம் கேட்டேன். நான் ரிஸ்க் எடுக்க மாட்டேன் எனது எல்லைக்குள் படம் பண்ணுவேன் பின்னர் ஆண்டவன் விருப்பம் என்பார். ஆர்.பி.சவுத்ரி 99 படங்கள் எடுத்தாலும் எந்த சர்ச்சைகளிலும் சிக்காதவர். ஏதாவது பிரச்சனை என்றால் சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக பேசி ஒரு காபி சாப்பிட்டு அதை முடித்து விடக் கூடியவர்.
இவ்வாறு ரஜினி தெரிவித்தார்.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!