ஆளுமை உரிமை : நீதிமன்றத்தை நாடிய மோகன்லால்
மார் 24, 2026
Advertisement
சினிமா பிரபலங்கள் பலரும், தங்களது பெயர், புகைப்படம் ஆகியவற்றை எந்தவிதமான அனுமதியும் வியாபார நோக்கில் பிறர் பயன்படுத்துவதற்குத் தடை வாங்கி வருகிறார்கள்.
"பர்சனாலிட்டி ரைட்ஸ்" என்ற பெயரில் அழைக்கப்படும் அந்த "ஆளுமை உரிமை" கோரும் அடுத்த சினிமா பிரபலமாக நடிகர் மோகன்லால் இணைந்துள்ளார். இது தொடர்பாக டில்லி உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது எனத் தகவல்.
இதற்கு முன்பு இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் கமல்ஹாசன், பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், ஹிந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷெராப், அக்ஷய்குமார், சல்மான் கான், அபிஷேக் பச்சன், மாதவன், இயக்குனர் கரண் ஜோஹர், தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி, நாகார்ஜுனா, பவன் கல்யாண், மகேஷ்பாபு, நாக சைதன்யா, ஜுனியர் என்டிஆர் ஆகியோர் இப்படி தங்களது "ஆளுமை உரிமை"யைப் பெற்றுள்ளார்கள்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!