காஞ்சனா ரீரிலீஸ் : முதல் நாளில் 3 கோடி வசூல்
மார் 14, 2026
Advertisement
ராகவா லாரன்ஸ் இயக்கி, நாயகனாக நடித்த, சரத்குமார், ராய் லட்சுமி, கோவை சரளா மற்றும் பலர் நடிப்பில் 2011ம் ஆண்டு வெளியான படம் "காஞ்சனா". சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படம் நேற்று தமிழ், தெலுங்கில் ரீரிலீஸ் செய்யப்பட்டது. பெரிய அளவில் எந்தவிதமான விளம்பரங்களும் செய்யாமல் இந்தப் படத்தை வெளியிட்டார்கள்.
தெலுங்கில் மட்டுமே இப்படம் நேற்று முதல் நாளில் 3 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் ராகவா லாரன்ஸ் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். "காஞ்சனா" படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ ரிலீஸ் செய்யப்பட்டதாலும், "காஞ்சனா" சீரிஸ் படங்களில் அந்தப் படத்திற்கு எப்போதுமே தனி மவுசு இருப்பதாலும் இந்த அளவிற்கு வசூல் கிடைத்துள்ளது என்கிறார்கள்.
நேற்று வெளியான சில புதிய படங்களை விடவும் இந்தப் படம் நல்ல வசூலைக் கொடுத்துள்ளது என்பதுதான் குறிப்பிட வேண்டிய ஒன்று.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!