
ஜனநாயகன் டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ?
இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, சினிமாவைத் துறந்து அரசியல் பக்கம் நிரந்தரமாகப் போக உள்ளார் விஜய். "ஜனநாயகன்" படம்தான் அவருடைய கடைசி திரைப்படம். அதனால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.
இன்று மாலை வெளியாக உள்ள டிரைலர் இப்படத்தின் பல கேள்விகளுக்கு விடையளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் ""இது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்கா ?” என்ற கேள்விதான் பலரது மனதிலும் எழுந்துள்ள ஒன்று.
டிரைலர் வெளியானதுமே, "பகவந்த் கேசரி" படத்தின் காட்சிகளுடன் இப்படத்தின் டிரைலரை ஒப்பிட்டுப் பேசுவது ஆரம்பமாக வாய்ப்புள்ளது. பாலகிருஷ்ணா நடிப்பில் வந்த தெலுங்குப் படமான "பகவந்த் கேசரி" படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம். அந்த ஹீரோயிசம் விஜய்க்கும் பொருத்தமாகவே இருக்கும். ஆனாலும், அப்படியே ரீமேக் செய்திருப்பார்களா இல்லை நிறைய மாற்றியிருப்பார்களா என்பதும் தெரியவில்லை.
அனைத்திற்குமான பதில் இன்று மாலை 6.45 மணிக்குக் கிடைத்துவிடும்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!