
தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ?
அடுத்து மூன்று வருட இடைவெளிக்கு பிறகு கடந்த வருடம் சூர்யா நடித்து வெளியான "ரெட்ரோ" படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்தப் படமும் விமர்சன ரீதியாகக் கூட வரவேற்பைப் பெறவில்லை. இருந்தாலும் படத்தில் இடம் பெற்ற "கனிமா" பாடல் சூப்பர் ஹிட்டானது. அடுத்து "கூலி" படத்தில் "மோனிகா" பாடலுக்கு மட்டும் நடனமாடினார் பூஜா. அந்தப் பாடலும் அதிக வரவேற்பைப் பெற்றது. படங்கள் தராத பிரபலத்தை இரண்டு பாடல்களும் தந்தது.
தமிழில் "முகமூடி, பீஸ்ட், ரெட்ரோ" என தொடர் சறுக்கல்கள் இருந்தாலும் பூஜாவுக்கு பெரிய நம்பிக்கையாக இருப்பது "ஜனநாயகன்". அடுத்த வாரம் வெளியாக உள்ள இந்தப் படம் எப்படியும் வெற்றி பெற்றுவிடும் என்று நம்பிக்கையில் இருக்கிறாராம் பூஜா.
இந்தப் படத்தை அடுத்து தமிழில் "காஞ்சனா 4" படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!