
இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள்
இந்த பரபரப்பை மேலும் அதிகமாக்கும் விதத்தில் இன்று மாலை 6.45 மணிக்கு "ஜனநாயகன்" படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. அதோடு, இன்று மாலை "பராசக்தி" படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளது. கூடவே, படத்தின் டிரைலரையும் வெளியிடலாம்.
இந்த இரண்டும் ஒரு பக்கம் போட்டியில் இருக்க மறுபக்கம் "ரஜினிகாந்த் 173" படத்தின் இயக்குனர் யார் என்பதன் அறிவிப்பையும் இன்று காலை 11 மணிக்கு வெளியிடுகிறார்கள். கமல்ஹாசன் தயாரிக்க ரஜினிகாந்த் நடிக்க உள்ள இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியானது. ஆனால், அப்போது இயக்குனராக அறிவிக்கப்பட்ட சுந்தர் சி விலகியதை அடுத்து, புதிய இயக்குனர் யார் என்பதை இன்று அறிவிக்க உள்ளார்கள்.
ரஜினி 173, ஜனநாயகன், பராசக்தி, இந்த மூன்று படங்களின் இன்றைய அப்டேட்டில் எந்தப் படம், யார் "டிரெண்டிங்"கில் இருக்கப் போகிறார்கள் என்பதை சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!