
‛வா வாத்தியார் ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம்
அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் சென்னை, ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தங்களிடம் ரூ.10.35 கோடி கடன் பெற்றிருந்தது. அதை வட்டி உடன் செலுத்தும் வரை படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது.
இந்த மனு மீதான விசாரணை இன்று(டிச., 4) வந்தது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் வா வாத்தியார் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பி வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.
கோர்ட்டின் இந்த உத்தரவால் ‛வா வாத்தியார்" படம் சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!