
ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு
பொங்கலை முன்னிட்டு தெலுங்கில் பிரபாஸ் நடித்துள்ள "தி ராஜா சாப்" உள்ளிட்ட சில படங்கள் வெளியாக உள்ளன. அதனால், "ஜனநாயகன்" படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு இருக்காது என கூறப்பட்டது. ஆனால், முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஒன்று இப்படத்தின் தெலுங்கு தியேட்டர் உரிமைக்காக சுமார் 10 கோடி அட்வான்ஸ் கொடுத்து வியாபாரத்தை நிறைவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாக உள்ளது. மொத்த தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல் வரவில்லை.
தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் இருந்தாலும் படத்தை வாங்க ஒரு நிறுவனம் முன்வந்திருப்பதே பெரிய விஷயம் என்கிறார்கள். விஜய் நடித்து வெளிவந்த கடைசி படமான "தி கோட்" படம் தெலுங்கில் 17 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டதாகத் தகவல். ஆனால், அங்கு படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை. இருப்பினும் "ஜனநாயகன்" படத்திற்கும் அதே அளவில் வியாபாரம் நடக்கும் எனத் தெரிகிறது.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!