
விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம் : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்
இது குறித்து இயக்குனர் பேசுகையில், ‛‛கேமிங் துறையில் பணிபுரியும் திருமணமான தம்பதிகள் பற்றி இந்தத் தொடர் பேசுகிறது. இன்றைய சமூகவலைதளங்கள் எப்படி அவர்களது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையில் தலையிடுகிறது என்பதையும் காட்டியுள்ளோம். இதுமட்டுமல்லாது பெண் காவல் அதிகாரி, 15 வயது பெண் மற்றும் 65 வயதுடைய வசந்தா என இவர்கள் வாழ்விலும் சமூகவலைதளம் எப்படி பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையும் இதில் பார்க்கலாம்"" என்கிறார்.
ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறுகையில், "தனது வேலையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு மிக்க கேம் டெவலப்பர் காவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சமூகவலைதளதங்களில் எதையும் தைரியமாக பேசுபவள் . இதனால் அவளுக்கு பாராட்டுகள் கிடைத்தாலும் அதைவிட அதிக வெறுப்பும் கிடைக்கிறது. இது அவளுக்கு தனிப்பட்ட வாழ்விலும் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இதில் இருந்து தனது குடும்பத்தையும் சொந்தங்களையும் எப்படி காக்கிறாள் என்பதுதான் கதை. வேலையையும், தனிப்பட்ட பொறுப்புகளையும் குழப்பிக் கொள்ளும் பெரும்பாலான தற்கால மாடர்ன் பெண்களை இந்த கதாபாத்திரம் பிரதிபலிக்கும்". என்கிறார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!