பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல்
ஆக 30, 2025
Advertisement
பாரதிராஜா இயக்கிய "கிழக்கே போகும் ரயில்" தமிழில் வெள்ளி விழா கொண்டாடிய படம். இந்த படத்தை பார்த்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா தனது மகன் சன்னி தியோலை இந்த கதையில் நடிக்க வைக்க விரும்பினார். ஆனால் அது உடனடியாக நடக்கவில்லை. அதற்குள் சன்னி தியோல் பாலிவுட் படங்களில் அறிமுகமாகி மளமளவென பெரிய ஹீரோவாகி விட்டார்.
பின்னர் "கிழக்கே போகும் ரயில்" படத்தை பாரதிராஜா ஹிந்தியில் இயக்க முயன்றபோது தர்மேந்திரா அதற்கு மறுத்து விட்டார். “உங்கள் படத்தில் என் மகன் நடிக்க நான் விரும்பியபோது அவர் அறிமுக நடிகர், இப்போது பெரிய ஆக்ஷன் ஹீரோவாகிவிட்டான். அதனால் அவனை கழுதைமேல் அமர்த்தி ஊர்வலம் செல்லும் காட்சிகள் அவனுக்கு பொருந்தாது. அதுவும் அது மென்மையான எழுத்தாளன் கேரக்டரில் நடிக்கும் அளவிற்கு அவன் இப்போது இல்லை” என்று கூறிவிட்டார். இதனால் அந்த படம் கைவிடப்பட்டது.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!