ரவி மோகன் இயக்கத்தில் நடிப்பது எப்போது : யோகி பாபு பதில்
ஜூன் 01, 2025
Advertisement
நடிகர்கள் இயக்குனராவது ஒன்றும் புதிதல்ல. எம்ஜிஆர், கமல்ஹாசன், தனுஷ், விஜய் ஆண்டனி என இந்த பட்டியல் நீளமானது. இவர்கள் வரிசையில் நடிகர் ரவி மோகனும் விரைவில் ஒரு படத்தை இயக்க உள்ளார். தனது முதல் படத்தை அவர் யோகி பாபுவை வைத்து இயக்க போகிறார். இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
இவர்கள் கூட்டணியில் உருவாகும் படம் பற்றிய கேள்விக்கு யோகி பாபு அளித்த பதில் வருமாறு... "ரவி மோகன் இயக்கும் படத்தில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது. இது முழுமையான குடும்ப உறவுகளை மையப்படுத்திய ஜாலியான படமாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!