தீபாவளி 2024 - முன்பதிவில் முந்துவது யார்?
அக் 28, 2024
Advertisement
2024 தீபாவளிக்கு "அமரன், ப்ளடி பெக்கர், பிரதர்" ஆகிய மூன்று நேரடி தமிழ்ப் படங்களும், "லக்கி பாஸ்கர்" என்ற டப்பிங் படமும் வெளியாக உள்ளது. டாப் வரிசை நடிகர்களின் படங்கள் எதுவும் வராத நிலையில் அடுத்த கட்டத்தில் உள்ள நடிகர்களின் படங்கள்தான் இந்த தீபாவளிக்கு வருகிறது.
அந்த விதத்தில் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, கவின் ஆகியோரது படங்கள்தான் போட்டியில் உள்ளன. சிவகார்த்திகேயன் நாயகனாக அறிமுகமாவதற்கு பத்து வருடங்கள் முன்பாகவே ஜெயம் ரவி நாயகனாக அறிமுகமாகிவிட்டார். இருந்தாலும் வியாபார அளவில், வசூல் அளவில் ஜெயம் ரவி பின்தங்கியே உள்ளார். கவின் தற்போதுதான் வளர்ந்து வருகிறார்.
இந்த தீபாவளி படங்களின் ஆன்லைன் முன்பதிவைப் பார்க்கும் போது சிவகார்த்திகேயன் நடித்துள்ள "அமரன்" படத்திற்கான முன்பதிவு அமோகமாகவே இருக்கிறது. முதல் நான்கு நாட்களுக்கான முன்பதிவு நிறைவாக நடந்துள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பு, ராணுவ அதிகாரியின் பயோபிக் படம் என்பதால் ஒரு எதிர்பார்ப்பு படத்திற்கு உள்ளது.
"பிரதர்" படத்திற்கு தற்போதைக்கு குறைவான தியேட்டர்களே கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. முன்பதிவு எதிர்பார்த்தது போல இன்னும் அமையவில்லை. படம் வெளியாக இரண்டு நாட்களே உள்ள நிலையில் இன்னும் டிரைலரைக் கூட வெளியிடவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு டீசர் மட்டுமே வெளியானது.
கவின் நடித்துள்ள "ப்ளடி பெக்கர்" படத்திற்கு சில தியேட்டர்களில் மட்டுமே முன்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இந்தப் படத்திற்கும் அதிகமான தியேட்டர்கள் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
இன்றைய நிலவரப்படி முன்பதிவில் சிவகார்த்திகேயன்தான் முன்னணியில் உள்ளார். மற்ற இரண்டு படங்களும் வெளியான பின்பு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்தால் மட்டுமே போட்டியில் ஓட முடியும். அதே சமயம் "அமரன்" படம் வெளியான பின்பு அதன் வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே அடுத்த வாரத்திற்கான வசூல் இருக்கும். படம் வெளிவருவதற்கு முன்னால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆனால், படம் வெளிவந்த பின்பு கிடைக்கும் வரவேற்பும், வசூலும்தான் உண்மையான வெற்றி. அது யாருக்குக் கிடைக்கப் போகிறது என்பதற்கு ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டும்.

Tags
Advertisement

வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!